பக்கம்:ஆசிய ஜோதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைக் கடல் ராஜகிருக நகரத்தை அடைதல் வேறு மானேந்தும் ஈசனுளம் நாண, ஆட்டின் மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல், வானேந்து மதில்மீது கொடிகள் ஆடும் மாநகரின் திருவாயில் வந்த போது; மாலைக் காலம் வேறு செங்கதிர் வெம்மை தணிந்ததடி!- வாசத் தென்றல் உலாவி எழுந்ததடி! பொங்கி வருஞ்சோணை மாநதியும் - ஒரு பொன்னிறம் பெற்றுப் பொலிந்ததடி! முல்லை மலர்ந்து மகிழ்ந்ததடி!- ஆம்பல் மூடிய வாயும் திறந்ததடி! எல்லை யிலாமலர்ச் சோலையிலே - வண்டும் இன்னிசை பாடித் திரிந்ததடி தாயும் இரங்கி வழிகுதடி-கன்றும் தாவிக் குதித்தோடிச் செல்லுதடி! ஆயும் பொழிலில் பறவையெல்லாம் - அந்தி அங்காடி போல ஒலிக்குதடி! வீதியில் கண்டவர் வியந்து நிற்றல் வையகந் தன்னில் உயிர்களின் மீதருள் மாரி பொழியும் பெரியவனாம் ஐயனைக் கண்டவர் கொண்ட அதிசயம் ஆராலே கூற இயலுமடி! 53 16 LY 18 29 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/54&oldid=1503934" இலிருந்து மீள்விக்கப்பட்டது