54 ஆசிய ஜோதி வாயிலைக் காத்திடும் சேவகரும்-வழி மாறா விலகி ஒதுங்கிறின்றார்; தாயினும் மிக்க தயாளன் இவன்-போல் இத் தாரணி கண்டதும் உண்டோஎன்றார். பாதையிற் சென்றவர் பார்த்துதின்றார்--ஒரு பக்கமாய் வண்டிகள் ஓட்டிநின்றார்; மாதவம் ஈதலால் வேறுளதோ!-என வாயார வாழ்த்திப் புகழ்ந்துநின்றார். சந்தை இரைச்சல் அடங்கியது!-கடைச் சண்டையும் இல்லா தொடுங்கியது! வந்தவர் போனவர் கண்களுக்கும்-அந்த வள்ளல் முகம்விருந் தானதம்மா! கூடம் எடுத்தகை தாழ்ந்திடாமல்- ஒரு கொல்லனும் கண்டு திகைத்துநின்றான்; ஊடுபா வோட்டிய சாலியனும் - நூலை ஓட்டி முடியாது விட்டுவந்தான். மண்ணைச் சுமந்து வருங்குயவன் - ஈதோர் மாமுனி என்று வணங்கிநின்றான்: எண்ணெய்க் குடமேந்து வாணியனும்-இவர் யாரோ பெரியர் எனப் பணிந்தான். பன்னிச் சிறுவரும் சாடிவந்தார்-அவர் பக்கத் தண்ணாவியும் ஓடிவந்தார்; கள்ளரும் உள்ளம் மறந்துநின்றார்-வட்டக் காரரும் காசிப்பை விட்டுவந்தார். 25 22: 23 26 28 26. 26. அண்ணாவி - உபாத்தியாயர்; வட்டக்காரர்- சில்லறை கொடுப்போர்.
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/55
Appearance