பக்கம்:ஆசிய ஜோதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைக் கடல் மாடும் அரிசியைத் தின்றதம்மா?- அதை மாற்றி யடிப்பாரும் இல்லையம்மா! வீடும் திறந்து கிடந்ததம்மா!- உலை வெந்திடு சோறும் குழைந்ததம்மா! பெண்டுகள் வாசலில் கூடிநின்றார் - இந்தப் பேரரு ளாளனும் யாரோஎன்றார்; கண்டவர் உள்ளம் கனியுதென்றார்- இவன் கண்ணின் அழகினைப் பாரும்என்றார் கன்னி ஒருமகள் மையெழுதி-இரு கண்ணும் எழுதுமுன் ஓடிவந்தாள்; பின்னும் ஒருமகள் கூந்தலிலே -- சூடும் தச்சி மலர்கையில் சுற்றிவந்தாள். பாலுக் கழுத மதலையுமே - ஐயன் பக்கம் வரக்களிப் புற்றதென்றால், சேலொக்கும் மாதர் விழிகள் - அவன்முகச் செவ்வியில் ஆழ்வது அதிசயமோ! கண்ணிற் கருணை விளங்குதென்றார் - நடை கம்பீர மாகவுங் காணுதென்றார்; எண்ணில் இடையனும் ஆகான் என்றார்- இவன் இராஜ குலத்தில் பிறந்தோன் என்றார்; யாகப் பசுவை எடுத்துவரும்- இவன் எண்ணரும் பக்தி யுடையன் என்றார்; மாகந் தொழுதேவ ராஜன்என்றார் உயர் மாதவச் செல்வன் இவனேஎன்றார். 32. மாகம் -விண்ணுலகம். 55 27 28 29 30 B1 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/56&oldid=1503936" இலிருந்து மீள்விக்கப்பட்டது