உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைக் கடல் வேதம் விதித்த விதிமுறையில் - ஒரு வெள்ளாடு கண்டு பிடித்துவந்து, யாதக மான பலியிடவே-அங்கு பாரில் கிடத்தி யிருந்தாரம்மா; ஆடுகள் விட்ட உதிரமெல்லாம் - அங்கோர் ஆறாக ஓடிப் பரந்ததம்மா! நாடியவ் வேள்விக் களத்தை விரித்திட நாவும் நடுங்கி ஒடுங்கு தம்மா! நீட்டிக் கழுத்தை அறுப்பதற்கோ?- அதன் நெஞ்சை வகிர்ந்து பிளப்பதற்கோ? தீட்டிய கத்தியும், கையுமாக ஒரு தீக்ஷிதர் முன்வந்து நின்றாரம்மா! அர்ப்பணம் செய்தல் வேறு யோகத் திறைவரே! எண்ணருந் தேவரே! அம்புவி யாளும் அரசர் பெருமான் பிம்பி சாரப் பெருந்தகை, இந்நாள் மறைகளில் விதிக்கும் வழிவகை யறிந்து முறையிற் செய்து முடிக்கும்இம் மகத்தில் பேணி உமக்கிடும் பெரும்பலி இதுவாம்! உயிரொடு துள்ளி ஒழுகிடும் உதிரம் கண்களிற் கண்டு களிப்பீ ராகுக! சீரிய குணத்துஎம் செங்கோல் மன்னன் யாரில் செய்த பழியும் பாவமும் தாங்கி இவ்வாடு சாவக் கையினில் வாங்கும்இவ் வாளால் வதைத்துஅவ் வூனையும் எரிவாய் இடுவன், யாவும் பொரியாய்ப் புகையாய்ப் போவது குறித்தே; 57 38 39 40 (5) (10) 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/58&oldid=1503938" இலிருந்து மீள்விக்கப்பட்டது