இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58 ஆசிய ஜோதி புத்தர் தடுத்தல் வேறு என்று சொல்லியாக தீக்ஷிதரும்- வாளை ஏந்திய கையினை ஓங்கையிலே, போன்றும் உயிரினைக் காக்கவரும் - அந்தப் புண்ணிய மூர்த்தியும் ஓடிவந்து, "அண்ணலே இக்கொடும் பாவிஇவ் வேளையில் ஆட்டினைக் கொல்லா தருள்புரிவீர் திண்ணிய ஞான முடையவரும் - இந்தத் தீவினை செய்வரோ'* என்றுரைத்தான். காலிலே கட்டிய கட்டவிழ்த்தான் - அதன் கண்டம் இறுக்கிய கட்டவிழத்தான்; வாலிலே கட்டிய கட்டவிழ்த்தான் - அதன் வயிறினிற் கட்டும் அவிழ்த்துவிட்டான்? அறிவுரை கூறுதல் நின்றவர் கண்டு நடுங்கினரே-ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினரே; துன்று கருணை நிறைந்தவள்ளல்- அங்கு சொன்ன மொழிகளைக் கேளும், ஐயா : "வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்; வீழும் உடலை எழுப்புதலோ--ஒரு வேந்தன் நினைக்கினும் ஆகாதையா! 42. 44- 45 46