உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைக் கடல் யாரும் விரும்புவ தின்னுயிராம் - அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம்; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப்படும் பாடு முழுதும் அறிந்திவீரோ? நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்; பாரினில் மாரி பொழிந்திடவே-வயல் பக்குவ மாவ தறிந்திலீரோ? காட்டும் கருணை யுடையவரே - என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்; வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த மர்மம் அறியாத மூடரையா! ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர் ஆக்கிய யாகத்து அளியுணவை ஈட்டும் கருணை இறைவர் கைகளில் ஏந்திப் புசிப்பரோ? கூறுமையா! மைந்தருள ஊமை மகனை ஒருமகன் வாளால் அரிந்து கறிசமைத்தால் தந்தையும் கண்டு களிப்பதுண்டோ?-இதைச் சற்றுநீர் யோசித்துப் பாருமையா! காடு மலையெலாம் மேய்ந்து வத்து-ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் ஒரு தீய செயலென எண்ணினீரோ? 48 Sk

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/60&oldid=1504308" இலிருந்து மீள்விக்கப்பட்டது