உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைக் கடல் மாண்ட மனிதனோர் ஆடுமாவான்-உடல் மாறியோர் ஆடும் மனிதனாகும்; நீண்ட உலகின் இயற்கைஐயா - இது நீதிநூல் கண்டிடும் உண்மைஐயா! பாரில் உதிரம் குளிப்பதனால் - ஒரு பாவமும் நீங்குவ தில்லைஐயா! சீரிய தேவரும் இச்செயல் - கண்டுதம் சிந்தை களித்திட மாட்டாரையா! தாயென நம்பி வரும்உயிரை - யாக சாலை நடுவில் கிடத்திஒரு பேயெனக் கீறிப் பிளப்பதனால்- என்ன பேறும் பெயரையும் பெற்றீரையா? துட்டப் பிசாசைக் குறித்திடினும் - இந்தத் தூண்டிலில் வந்த தகப்படுமோ? வெட்டிக் கொலைசெய்ய வேண்டாமையா!- இதை விட்டொழிதல் மிக்க மேன்மைஐயா! ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச் செல்வ தொருநாளு மில்லைஐயா! முன்னைப் பிறப்பினில் செய்தவினை - யாவும் முற்றி முதிர்ந்து முளைத்தெ தழுந்து பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது பித்தர் உரையென எண்ணினீரோ? 6t 59 60* 61. 62 63. 64.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/62&oldid=1504304" இலிருந்து மீள்விக்கப்பட்டது