பக்கம்:ஆசிய ஜோதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆசிய ஜோதி பண்ணியஞ் சிறிது யானும் பக்குவம் செய்து வந்தேன். அண்ணலே! அருந்தி நீயும் அருள்செய வேண்டும்' என்றாள். என்றவள் படிகக் கிண்ணம் ஏந்திய வாச நீரை அன்றவன் திருக்க ரங்கள் அலம்பிட அளித்து, அப்பாலோர் பொன் தரு கலத்தில் பண்டம் பொலிவுறப் பெய்து நின்றாள்; ஒன்றிய கருணை மூர்த்தி உம்பர்நாட் டமுதின் உண்டான். புத்தர் அமுதுண்டு வினவுதல் வேறு உண்ட அமுதின் உறுகுண மெல்லாம் ஏழைஎன் நாவால் இயம்புதல் எளிதோ? இரவும் பகலும் இடைவிடாமல் ஊணும் உறக்கமும் இன்றி; உரவோன் தீவிர மாகச் செய்த தவத்தால் வாடி இளைத்து வருந்திய களைப்பெலாம் கனவு போலக் கழிந்து போயது. உயிரும் உணவை உண்டது போல ஊக்கமும் ஒளியும் ஒருங்கு பெற்றது. வேனில் வெயிலில் வெந்தெரி வேளையில் பாலை வனத்தில் பறந்து பறந்து தளர்ந்த பறவையோர் தடாகங் கண்டு குளித்துக் குடித்துக் குதுகலிப் பதுபோல் ஆரமு துண்ட அரும்பய னாக N (5)) (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/69&oldid=1513113" இலிருந்து மீள்விக்கப்பட்டது