புத்தரும் சுஜாதையும் மங்கல நூலை வரிவரி யாக வரிந்து சுற்றி வைத்திட ஏகிய செல்வி இராதை, திரும்பி வந்து காணாக் காட்சி கண்டவ ளாகி, அதிசயம், அதிசயம், அம்மா அதிசயம்! மலர்கள் மலர்ந்து மழையெனப் பொழியும் மரத்தின் அடியில் மௌன மெய்தி, சோதி மண்டலம் சூழ்ந்து பொலிய முழங்கை முடக்கி முட்டில் அமர்த்தி. வனத்தில் வாழும் மாபெருந் தெய்வம் அருள்வடி வாகி அமர்வது பாராய்! சாந்தம் உருவாய்த் தழைப்பது காணாய்! விரிதா மரையை வென்ற விழிகளில் தெய்வத் தன்மை திகழ்வது நோக்காய்! பாக்கியம், பாக்கியம், பாக்கியம் அம்மா! கண்ணிற் காணா கடவுளை இந்த மண்ணிற் கண்டு வணங்கப் பெறுதலே! என்று பலவும் இயம்பி நின்றனள். சுகுண சுந்தரி சுஜாதை கேட்டு, நெஞ்சில் அன்பு நிறைந்தவ ளாகி, வனத்தில் வந்து, மலர்மழை பொழியும் மரத்தின் அடியில் வையகம் வாழ] மாதவம் செய்யும் வள்ளலைக் கண்டனள். சுஜாதை புத்தரை வணங்குதல் வேறு கண்ணெதிர் காட்சி தந்த கடவுளே இவரென்று எண்ணி மண்ணுற வணங்கிச் செந்தா மறைமல ரடிகள் போற்றி, 67 (50) (55) (69) (63) (70)
பக்கம்:ஆசிய ஜோதி.pdf/68
Appearance