பக்கம்:ஆசிய ஜோதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

நாம் படித்து நோக்கினால், கவிமணி எவ்வளவு அழகாக இச்சரிதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியும், ஆசிரியரது ஆழ்ந்த உணர்ச்சியும், தமிழின் குழைவும், கவிதையின் அருமைப்பாடும் படிப்போரது உள்ளத்தைக் கனிவிப்பன... பல உயர்ந்த செய்யுட்கள் ஆங்கிலத்திலிருக்க, இப் பாடற் பகுதிகளை மொழிபெயர்க்கத் தெரிந்து எடுத்தல் கொள்வானேன்? புத்த பகவானது அருட்பாங்கிலே கவிழணி ஈடுபட்டதே காரணம். தாமும் அவ் அருட்கொள் கையை மேற்கொண்டவர் என்பதும் காரணம். அன்றியும், இப்பாடல்கள் பெயரளவில் தான் மொழிபெயர்ப்பு, இவற்றை ஒரு நூதன சிருஷ்டி என்றே நாம் கொள்ளுதல் வேண்டும். உண்மையான தமிழ் மரபுணர்ச்சி வேண்டுமாயின், 'கருணைக் கடல்' முதலிய பாடற் பகுதிகளைக் கற்க வேண்டும். வருங்காலத்துக்குரிய தமிழ் வேண்டுமாயின், இவற்றையே கற்க வேண்டும். மிகப் பூர்வ காலத்துள்ள இயற்கைத் தமிழின் இனிமை காண வேண்டுமாயின், இப்பகுதிகளையே மீண்டும் மீண்டும் கற்க வேண்டும். அமர்ந்த, இனிய, மனோரம்மியமான தமிழ் மணம் வேண்டுமாயின், கவிமணியினது இப்பாடற் பகுதிகளிலே இனிது நுகரலாம்."

         இப் பதிப்பை வெளியிடுவதில் உதவி புரிந்த திரு. வித்துவான் மூ. சண்முகம் பிள்ளை அவர்களுக்கு எமது நிலையத்தின் நன்றி உரித்தாகுக.

சென்னை, 2-10-64,

                                                பாரிநிலையத்தார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/9&oldid=1439745" இலிருந்து மீள்விக்கப்பட்டது