உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

கொண்டார்கள். அன்று மறுநாள்தான் தமிழாட்சிச் சட்டம் சென்னைச் சட்டசபையில் நிறைவேறியது, அச்சொற்களை அடிப்படையாகக் கொண்டுதான் நிகழும் தைப் பொங்கல் நாள் ஆகிய இன்று நம்தம் தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கி நடைபெற இருக்கின்றது.

ஆசிரியர் கல்லூரிக் கலைச்சொற்கள்

ஆசிரியர் கல்லூரிகளிற் பயிற்சி பெறும் பட்டதாரிகள் பின் உயர் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்ந்து, நம் தாய்மொழியாகிய தமிழிலேதான் பாடங்களைக் கற்பிக்கின்றனர்; ஆதலால் அவர்களுக்குப் பயிற்சிக் கல்லூரிகளில் பாடங்களெல்லாம் தமிழிற் கற்பிக்கப் பெறுவதுதான் நன்மை தரும் முறையாகும் எனக் கருதி, நம் தமிழ்ச் சங்கம் 15-3-1957ல் ஆசிரியர் கல்லூரிக் கலைச் சொல்லாக்கக் கழகத்தை அமைத்தது. அதன் தலைவர் சென்னை மாநிலப் பொதுக் கல்வி இயக்குநர் திருவாளர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் எம்.ஏ., எல். டி., ஆவர்; அதன் உறுப்பினர் நம் நாட்டிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளின் முதல்வர்களும், பல பேராசிரியர்களும் ஆவர். இதிற் பணியாற்றும் தலைவர் முதலிய அரசியல் அலுவலாளர்களுக்குச் சென்னை அரசாங்கம் 23-5-1957ல் (G.O. Rt.No. 241, Education) அனுமதியருளியது.

இக்கழகம் 21-3-1957ல் தொடங்கி, நாடோறும் சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியிற் கூடி 31-3-1957 முடியப் பணி புரிந்தது. அதன் விளைவே இக்கலைச் சொற்கள்.

14-1-1958,
திருநெல்வேலி.

இ. மு. சுப்பிரமணியபிள்ளை,
அமைச்சர்,
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்,