உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

society சமூகம்
socio-economic survey சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு
scciology சமூகவியல்
sociogram சமூக விளக்கப் படம்
sociometry சமூக அளவை நூல்
socket குடை குழி, கிண்ணம்
soft ball மென்பந்து
soft pedagogy மெல்ஆசிரியவியல், நய முறைப் போதனை
soil நிலம், மண்
solidarity ஒருமுகப்பாடு
solidity திண்மை
solitary தனித்த
solution விடை, விடை காணல்
solve விடுவி
somatic உடல் சார்ந்த
somnambulism துயில் நடை, தூக்கத்தில் நடத்தல், உறக்க நடை நோய்
sonant குரலொலி
song பாடல்
sophism போலி வாதம்
sorrow துயரம்
sorting test இனம் பிரித்தற் சோதனை
soul ஆன்மா, ஆவி, உயிர்
sound ஒலி, குற்றமற்ற
source மூலம், தோற்றுவாய், பிறப்பிடம்
method மூல முறை
souvenir நினைவு மலர்
space இடம், வெளி
space perception இடக் காட்சி
space relations test இடத் தொடர்புச் சோதனை
spaced learning இடை விட்டுக் கற்றல்
spaced repetition இடை விட்ட பன்முறைப் பயிற்சி, இடை விட்டுப் பயிலல்
span அகலம், வீச்சு
spark சுடர்
spasm இழுப்பு, துடிப்பு
spasmodic விட்டு விட்டுத் தோன்றும்
spate of words சொல் மாரி
spatial ability இடவாற்றல்
spatialization இடமமைத்துக் காணல்
S.P.C.A. மிருகத் துன்பத் தடுப்புச் சங்கம்
speaking பேசுதல்
special சிறப்பான, சிறப்பு, தனிச் சிறப்புள்ள
specialization தனித் துறைப் புலமை
species இனம்
specific திட்டமான, குறித்த
specificity திட்டப் பண்பு
specification விவரம், விவரம் குறிப்பிடுதல்
specimen மாதிரிப் பொருள்
spectator காண்போர்
speculation ஆழ்ந்தாராய்தல்
speech பேச்சு
speed வேகம்
spelling எழுத்துக் கூட்டல்
sperm கரு மூலம், விந்து
sphere உருண்டை, கோளம்
spinal cord தண்டு வடம்
spinning நூற்பு, நூற்றல்
spiral சுருள்
spirit ஊக்கம்
spiritual ஆன்மிக
splint பத்தை
spontaneous தானாய் எழும், தன்னியல்பான
spoon feeding அள்ளி ஊட்டல், வாயில் ஊட்டல்
sporadic இடையிடையான
sport கேளிக்கை, விளையாட்டு, ஆட்டம்
sportsmanship ஆட்ட நற்றிறம்
spot இடம், பொட்டு
sprain சுளுக்கு
spread பரவு
spring துள்ளு, பாய்ந்து செல், ஊற்று
sprint பாய்ச்சல், சாட்டம்
spurt பீறிடல்
squad பயிற்சிக் குழு, குழு
squat

8