பக்கம்:ஆடரங்கு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஆடரங்கு


இதுபற்றி ராஜாமணிக்கு ரொம்பவும் கோபம். விஷயம் தெரிந்தது முதல் அவன் தன் சிற்றப்பன்களிடம் போவது கூடக் கிடையாது. ஆனால் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் இதை எல்லாம் பாராட்டுகிற மாதிரி காட்டிக்கொள்வது கிடையாது; "அவர்கள் என்னை லட்சியம் செய்யா விட்டால் என்ன? எங்கேயாவது நன்றாக இருந்தால் சரிதான்" என்று சொல்லுவார். ஆனால் அவருக்கும் மனசில் இது ஒரு பெரிய குறைதான்.

ஓரொரு சமயம் ராஜாமணியே சொல்லுவான்: "நம்மோடு சேர்ந்துகொண்டார்களானால் அவர்களையும் நம்முடைய துரதிருஷ்டம் பிடித்துக்கொண்டாலும் பிடித்துக் கொண்டுவிடும். சேராமல் இருப்பது நல்லதுதான். அவர்களாவது சௌகரியமாக இருக்கட்டும்" என்பான்.

கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் அறுபத்து நாலு வருஷங்களில் ஒரு தவறுகூடச் செய்ததில்லை. மனசில் உறுத்தக் கூடியதாக ஒரு தவறுகூடச் செய்ததில்லை என்பது அவருக்கு மிகவும் ஆறுதல் அளித்த விஷயம்.

"அப்பாவின் வாழ்க்கையிலிருந்து ஒன்றுதான் நான் கற்றுக்கொண்டேன். ஸ்திரீகள் விஷயத்தில் கெட்டவனாக இருப்பவன். குடும்பத்துக்கு லாயக்கற்றவன் என்று கண்டு கொண்டேன். ஸ்திரீலோலனாக இருப்பவன் தன் வாழ்வு மட்டுமல்ல, தனக்குப் பின் வருகிற சந்ததியின் வாழ்வையும் குலைத்து விடுகிறான் என்று அறிந்துகொண்டேன். ஸ்திரீகள் விஷயத்தில் நல்லவனாக இருப்பது என்று அன்றே தீர்மானித்துக்கொண்டுவிட்டேன் நான்."

ஸ்திரீகளைப் பற்றிய மட்டிலுந்தான் என்றில்லை. மற்ற எல்லா விஷயங்களிலுமே அவர் நல்லவராகவே தம் வாழ்நாட்களைக் கழித்துவிட்டார். யாரும் அவரைப்பற்றிக் குறை கூறவே துணிய மாட்டார்கள். அவர் புறம் கூறியதில்லை; பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டதில்லை; பிறருக்குக் கெடுதல் நினைத்ததுமில்லை, செய்ததுமில்லை. அவர் பிறர் காரியங்களில் கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/103&oldid=1523729" இலிருந்து மீள்விக்கப்பட்டது