பக்கம்:ஆடரங்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாத் தியாகம்

99

கொண்டதுமில்லை. தாம் உண்டு தம் காரியம் உண்டு என்று இருந்துவிட்டவர்.

நல்லவர்களுக்கு இகபோகத்தில் எதுவும் கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டு, கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள்.

"மற்றதெல்லாம் பாழ்த்துவிட்டது உண்மைதான் என்றாலும், எனக்கு எஞ்சியிருப்பது ராஜாமணி. அவன் தலைப்பட்டு என் துக்கங்களையெல்லாம் துடைத்துவிடுவான். அவன் உள்ள வரையில் எனக்கு என்ன கஷ்டம்!” என்றுதான் ஆரம்பத்தில் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் எண்ணினார். அவர் அப்படி எண்ணியதில் தவறு ஒன்றும் இல்லையே! ஒரு நாளில் அறுபது நாழிகை நேரமுமா இருட்டாகவே இருந்துவிடும்?

இதுதான் விசேஷம். நாளில் அறுபது நாழிகை நேரமும் இருட்டாகவே இருந்துவிட்டது என்பது மாத்திரமல்ல, அடுத்த நாளும் இருட்டிலேயே தொடங்கிற்று!

ராஜாமணி நன்றாகவேதான் படித்தான், திருப்திகரமாகவே தான் பரீட்சைகளில் தேறினான். சூட்டோடு சூடாக ஒரு வேலையிலும் அமர்ந்தான். 'என் கஷ்டங்களெல்லாம் தீர்ந்தன' என்று எண்ணிக் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் மனம் பூரித்தார்.

ஆனால் அந்தப் பூரிப்பு ஏழெட்டு மாசங்களுக்குக்கூட நீடிக்கவில்லை. ராஜாமணிக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. காரியாலயத்தில் ஓர் அயோக்கியன் செய்த காரியம் அஜாக்கிரதையுள்ள ராஜாமணியின் தலையில் சுமத்தப்பட்டது. ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டிய ராஜாமணி தெய்வாதீனமாகத் தப்பித்துக்கொண்டான்.

சில நாட்களிலேயே ராஜாமணிக்கு மீண்டும் வேலை கிடைத்தது. செய்கையற்று, தான் செய்யாத காரியங்களுக்கெல்லாம் அளவு மீறிய தண்டனையை எதிர்பார்த்த வண்ணமே ராஜாமணி தன் வேலையைச் செய்தான்; நாட்களைக் கடத்தினான். தண்டனை ஒன்றும் கிடைக்கவில்லை. இச் சமயம்—வேலை சீக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/104&oldid=1523725" இலிருந்து மீள்விக்கப்பட்டது