பக்கம்:ஆடரங்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ஆடரங்கு


பள்ளியிலும் கலாசாலையிலும் இந்த இரண்டு நண்பர்களும் ஏறக் குறைய ஒரே படியில் இருந்தவர்கள். அவரவர்கள் வகுப்பில் அவரவர்கள் முதல்தான். அதாவது பள்ளியிலும், பிறகு கலாசாலைக் கடைசி வகுப்பை எட்டும் வரையிலும் இருவருக்குமே படிப்பிலே ஆர்வம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்டர்மீடியட் பாஸ் பண்ணிவிட்டு ராஜா பி.ஏ. வகுப்பில் சேர்ந்தான். அதற்கடுத்த வருஷம் சிவசங்கரன் அதே கலாசாலையில் வந்து ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தான். இருவருக்குமே கலாசாலையில் படிப்பில் கடைசி வருஷம் சப்பிட்டுவிட்டது. ராஜா இரண்டு வருஷம் பி.ஏ. யில் தவறிவிட்டு மூன்றாவது வருஷந்தான் தேறினான். சிவசங்கரன் ஆனர்ஸ் பரீக்ஷை முதல் வருஷம் பரீக்ஷை கொடுக்காமல் தள்ளிவிட்டு, மறு வருஷம் பரீக்ஷை கொடுத்தும் பாஸ் பண்ணாமல் பி. ஏ. டிக்ரியே பெற்றான். இரண்டு நண்பர்களுமே ஒரே கான்வகேஷனில் தான் பட்டம் பெற்றார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நடந்த கல்யாணங்களும் ஒரே வருஷத்தில் ஒரே மாதத்தில் ஒரே முகூர்த்தத்தில்தான் நடந்தன; வெவ்வேறு ஊர்களில் நடந்தன என்பதால், ஒருவன் கல்யாணத்துக்கு மற்றவன் போகவில்லை.

ராஜாவுக்கு ஒரு தமக்கை மட்டும் உண்டு. சிவசங்கரனுக்கு ஒரு தங்கை மட்டும் உண்டு. அவர்கள் இருவருடைய தகப்பன்மார்களும் கூட ஒரே மாதிரியான சர்க்கார் உத்தியோகங்களில் ஒரே மாதிரியான சம்பளங்கள் வாங்கிக்கொண் டிருந்தார்கள். பிரதி வருஷமும் ஒரே மாதிரியான சம்பள உயர்வும் மூன்று வருஷங்களுக்கு ஒரு தரம் என்று ஒரே மாதிரியான மாற்றல்களும் பெற்று உத்தியோகம் பார்த்து வந்தார்கள். பொருளாதாரத் துறையில் இரண்டு குடும்பங்களுமே சரி சமம் என்று தான் சொல்லவேண்டும். கிராமத்தில் இரு குடும்பங்களுக்கும் சிறு வீடுகளும் ஏதோ கொஞ்சம் நிலபுலன்களும் இருந்தன.

ராஜாவுடைய தகப்பனாரும் சிவசங்கரனுடைய தகப்பனாரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் ரிடையரானார்கள். சற்றேறக்குறைய ஒரே மாதிரியான பென்ஷனும், இன்ஷ்யூரன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/135&oldid=1524971" இலிருந்து மீள்விக்கப்பட்டது