பக்கம்:ஆடரங்கு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஆடரங்கு

நாற்பது வருஷங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்ததெல்லாம் பூராவும். இல்லாவிட்டாலும் முக்கால் வாசியும் போய்விட்டது.

1940-ல் கடைசித் தடவையாக நண்பர்கள் இருவரும் சந்தித்தபோது நிலைமை இதுதான். இருவருக்குமே சற்றேறக் குறைய வயது முப்பதாகிவிட்டது. வாழ்விலே இருவரும் தோல்வியை - பொருளாதாரத் துறையில் தோல்வியை - எதிர்பார்த்து நின்றனர். அப்படி ஒன்றும் மகத்தான தோல்வியல்ல என்றாலும் தோல்விதான். வாழ்க்கையில் மற்றதெல்லாம் இருந்தென்ன? பொருளீட்டத் தெரியாதவன், தோல்வியுற்றவன்தானே!

ராஜா அந்தத் தடவை சிவசங்கரனைத் தேடிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போன சமயம் அவன் வீட்டிலில்லை. அவனுடைய தகப்பனார் மட்டும் இருந்தார். தன் பிள்ளையின் ஆப்த நண்பனிடம் சிவசங்கரனின் போக்கை எல்லாம் சவிஸ்தாரமாகக் கூறி அழாத குறையாக வருந்தினார், அவன் தகப்பனார். 'பணம் போய்விட்டதென்பதுகூட எனக்குப் பெரிதல்ல. பணம் அப்படி ஒன்றும் சாசுவதமல்ல. ஆனால் பணம் போனதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்துகொள்ளாதவனை அறிவாளி என்று எப்படிச் சொல்வது?' பத்திரிகைகளில் பெயர் பிரமாதமாக அடிபடுகிறதே, அதனால் ராஜா அறிவாளியாக இருப்பான் என்பது அவர் எண்ணம்போலும்! 'வருகிறது வருகிறது என்றிருந்த சண்டையும் வந்துவிட்டது. நிலைமை இன்னும் மோசமாகப் போகப்போகிறது! அதைத் தானாகவும் உணராமல், நான் சொன்னாலும் கேட்டுக்கொள்ளாமல் அவஸ்தைப்படப் போகிறான்' என்றார் சிவசங்கரனின் தகப்பனார்.

அதை ராஜா தன் நண்பனிடம் சொல்லவில்லை. பெரியவர் சொன்னதைத் தனக்கும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இப்போது 1950-ல் சிவசங்கரன் தன்னைத் தேடிக்கொண்டு வந்தபோது அதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டே பேசிக்கொண் டிருந்தான். ஆனால் அதேபோல ஒரு ஞாபகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/137&oldid=1524973" இலிருந்து மீள்விக்கப்பட்டது