பக்கம்:ஆடரங்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பந்தயத்தில்

133

சிவசங்கரனின் மனத்திலும் உறுத்திக்கொண் டிருந்தது என்பது பாவம், ராஜாவுக்குத் தெரியாது. சிவசங்கரனை ராஜா அந்தப் பத்து வருஷங்களிலும் சந்திக்கவில்லையே தவிர அவன் தகப்பனார் சந்தித்திருந்தார். ராஜாவிடம் அன்று சிவசங்கரனின் தகப்பனார் பேசிய மாதிரியே அழாத குறையாக ராஜாவின் தகப்பனாரும் சிவசங்கரனிடம் பேசியிருந்தார் என்பது பாவம், ராஜாவுக்குத் தெரியவே தெரியாது. இப்போது அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் சிவசங்கரனும் தன்னுடைய முப்பது வருஷத்து நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

வீட்டில் குழந்தை குட்டிகளின் எண்ணிக்கை, சுக சௌகரியங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பொதுவாகப் பேசி ஆன பிற்பாடு சிவசங்கரன் சொன்னான்: "உன் கதைகளை எப்பவாவதுதான் பத்திரிகைகளில் பார்க்கிறேன்" என்று.

"ஆமாம்; எப்பவாவதுதான் ஏதாவது எழுதுகிறேன்" என்றான் ராஜா.

"ஏன் அதிகம் எழுதக் கூடாதோ? எழுதலாமே; பத்திரிகைகள்தாம் அதிகம் இருக்கின்றனவே!'

"பத்திரிகைகளும் அதிகந்தான். எழுதுகிறவர்களும் அதிகந்தான்" என்றான் ராஜா.

"ஆனாலும் உன்னைப் போன்ற எழுத்தாளன்......"

"இதோ பார், சங்கரா ! ஒரு விஷயம். நான் எழுதுவது யாருக்கு பிடிக்கிறது என்கிறாய்? யாருக்குப் புரிகிறது என்கிறாய்?' என்றான் ராஜா.

"நீயாகச் சொல்லவே, நான் சொல்கிறேன்; கோபித்துக் கொண்டு விடாதே !" என்றான் சிவசங்கரன்.

"சொல்லு."

சிவசங்கரன் சற்றுத் தயங்கினான்; பிறகு சொன்னான்: "நான் கூட உன்னைச் சந்திக்கும்போது கேட்க வேண்டும் என்று நினைத்தேன்." ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/138&oldid=1524974" இலிருந்து மீள்விக்கப்பட்டது