பக்கம்:ஆடரங்கு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பாத ஸரம்

ழக்கத்துக்கு மாறாக அன்று ரெயிலில் சிதம்பரத்திலேயே கூட்டமாகத்தான் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக நானும் ராஜியையும் பாப்பாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன். இந்த வண்டிக்கு இப்படிக் கூட்டமாக இருக்குமென்று தெரிந்திருந்தால், நான் முந்திய வண்டிலேயே கிளம்பியிருப்பேன்; அல்லது அடுத்த மெயிலுக்கும் போயிருக்கலாம். எனக்கு எவ்விதமான அவசரமும் இல்லை.

ஆனால் கிளம்பியாகிவிட்டது. திரும்புவது சரியல்ல. வண்டியில் ஏறிக்கொண்டோம். அதிகக் கூட்டமில்லாத இரண்டாம் வகுப்பு வண்டியில் ஸீட்டுக்கு நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். யாரும் நகர்ந்து இடம் தருகிற மாதிரியும் முதலில் தோன்றவில்லை.

"இத்தனை கூட்டமாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், மூன்றாம் வகுப்பு டிக்கட்டே வாங்கி யிருக்கலாமே!" என்றாள் ராஜி.

நான் அநாவசியமாக அதிகச் செலவு செய்கிறேன் என்பது என் மனைவியின் அபிப்பிராயம். அதற்கு மாற்றாக அவசியம் கிடைத்த போதெல்லாம் செட்டாகப் பேசிவிட வேண்டியது தன் கடமை என்று அவள் எண்ணி இப்படிப் பேசுவது வழக்கமாகிவிட்டது.

"கூட்டமாக இருந்தால்தான் என்ன ? ஒருமணி நேரம் தானே ! மாயவரத்தில் இறங்கி வேறு வண்டி மாற்றவேண்டும்" என்றேன் நான்.

கையிலிருந்த பையை ஆசனத்துக் கடியில் வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/142&oldid=1527006" இலிருந்து மீள்விக்கப்பட்டது