பக்கம்:ஆடரங்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஆடரங்கு


"விலங்கு மாதிரிதான் இருக்கு அது" என்றாள் ராஜி.

மாடிப்படிகள் இறங்கும்போது நான் ராஜியைக் கேட்டேன். 'கடைசியாக அந்தப் பெண் நாராயண செட்டியாரைத் தஞ்சாவூருக்கு அழைத்தாளே......"

"அழைத்தாளா? நான் கவனிக்கவில்லையே!" என்றாள் ராஜி.

திருவாரூர் வண்டியில் ஏறிக்கொண்டோம். "அந்தச் செட்டியார்தான் எத்தனை வைரம் போட்டிண் டிருக்கார்? அடேயப்பா! ஆளை அழிச்சால் இரண்டு மூணு லக்ஷம் தேறும் போல் இருக்கு" என்றாள்.

நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். நவரத்தின ஆசாமி நாராயணசாமி செட்டியார், அவர் உடலின் பல பாகங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் டால் வீச மாடிப்படிகள் ஏறி வந்துகொண் டிருந்தார்.

"அதென்னவோ, ராஜி, நம் பாப்பாவைப் படிக்கவைக்கப் படாதுன்னுதான் எனக்குத் தோணறது?" என்றேன் நான்.

 

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/153&oldid=1527038" இலிருந்து மீள்விக்கப்பட்டது