பக்கம்:ஆடரங்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஆடரங்கு

மகா கஷ்டமாகப் போய்விட்டது. போ என்று நிர்த்தாக்ஷிண்யமாக எப்படிச் சொல்வது?

"கஷ்டமோ நஷ்டமோ நானும் பட்டுண்டு உன்னோடே இருப்பதுதாண்டா எனக்குச் சுகம்" என்றார் கிழவர்.

ராஜாமணி தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்: 'நீ போற வரையிலும் என் கஷ்டங்களும் என்னைவிட்டு அகலா. நீ போன பிறகுதான் என் நிலைமையும் திருந்தும் என்று தோன்றுகிறது. அது உன் அதிர்ஷ்டமோ என் அதிர்ஷ்டமோ, எப்படிச் சொல்றது?' பிறகு உரக்கச் சொன்னான்: "என்னோடே இருந்து நீ என்ன சுகத்தைக் கண்டு விட்டயோ? இனிமேல் என்ன சுகத்தைக் காணப் போறியோ, அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்" என்றான். அவன் குரல் எதிர்பாராத துக்கத்தால் சற்றுக் கம்மியது. அவன் கண்கள் கண்ணீரால் மங்கின. அவன் உள்ளத்திலே ஓர் ஏக்கம் குடி புகுந்தது. உணர்ச்சி வேகம் அவன் உடலை ஒரு தாக்குத் தாக்கி உலுக்கியது. "சீ ! இதுவும் ஒரு வாழ்க்கையா!" என்று தன்னையே நொந்துகொண்டான்.

****

ன் தகப்பனாருடைய அறுபத்துநாலு வருஷ வாழ்க்கையும், தன்னுடைய முப்பத்தைந்து வருஷ வாழ்க்கையும் அவன் கண்முன் திரை ஓடின.

தன் ஆதி நாளையக் கதையை எல்லாம் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளே அவனுக்குப் பல தடவைகளில் சொல்லியிருந்தார். அதப் பாதாளத்திலிருந்து கரையேறி மெல்ல மெல்ல அடி வைத்து அவர் ஒரு சிறு சிகரத்தை எட்டிப் பிடித்தவர். ஆனால் அந்தச் சிறு சிகரத்தின் மேல் கூட அவரால் அதிக நேரம் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. அச் சிகரத்தை அடுத்திருந்த சிகரத்தை நோக்கி இரண்டடி எடுத்து வைத்திருந்தால் போதும்; நிலைத்துக்கொள்ளலாம். ஆனால் ஓரடி எடுத்து வைத்தால் ஒன்பதடி சறுக்கிவிட்டது. முன்னேற ராஜாமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/99&oldid=1523736" இலிருந்து மீள்விக்கப்பட்டது