பக்கம்:ஆடரங்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாத் தியாகம்

93


"சாகறத்துக்கு யாருடா ஆசைப்பட்றா? வயசு அறுபத்து நாலு ஆச்சே! படற கஷ்டமெல்லாம் பட்டாச்சு, போகலாமின்னா மனசு கேக்கறதா ? கேக்க மாட்டேன் என்கிறது. இப்படியே இருக்கலாமே, இருந்துண்டே இருக்கலாமேன்னு தான் இருக்கு" என்றுர் கிழவர்.

ராஜாமணி அவரை நிமிர்ந்து பார்த்தான். அவன் தகப்பனார் கெட்டிக்காரர்தான். அதாவது ஒரு காலத்தில் கெட்டிக்காரராக இருந்தவர்தாம். இப்பொழுது அறிவு மழுங்கிவிட்டது. மற்றப்படி புலன்கள் அதிகமாக அடங்கிவிடவில்லை. கண் தெரிந்தது-பல்லெல்லாம் சரியாகத்தான் இருந்தது; இன்னமும் நாலு மைலானாலும் பாராட்டாமல் நடந்து வருவார். தெய்வசித்தம் அப்படியானால் அவர் இன்னும் பத்து வருஷங்ககள் சுகமாக இருக்கலாம்.

ஆனால் அவருக்குக் கஷ்டமெல்லாம் அவர் பிள்ளையால் ஏற்பட்டதுதான். அதை ராஜாமணியே ஒப்புக்கொண்டான்.

"மார்கழி, தை என்று கணக்குப்பண்ணாதே அப்பா. எனக்கு இதுவரையில் நேர்ந்த கஷ்டங்களை எல்லாம் விட அது மகாப் பெரிய கஷ்டமாகிவிடும்," என்றான் ராஜாமணி.

உண்மையிலேயே அது மகாப் பெரிய கஷ்டமாகத்தான் போய்விடும். முதலில் அப்பா மூலம் கிடைத்துக்கொண்டிருந்த பென்ஷன் தொகை போய்விடும்.

கிழவர் கிருஷ்ணசாமி சாஸ்திரி சொன்னார்: "இத்தனை வயசு இருந்தாச்சு. எனக்கு இனிமேல் கஷ்டம் நஷ்டம் வந்தாலுங்கூடத் தொடாதுன்னுதான் சொல்லணும். உன்னைத் தவிர வேறு யார் எனக்கு? வேறே எங்கே போய் நான் எப்படிச் சௌகரியமாக இருக்க முடியும்? எங்கே போய் நான் எதற்காக உசிர் வச்சுண் டிருக்கணும்? நீ கஷ்டப் படறச்சே, உன் கண்ணில் படாமே, உன்னுடன் இருக்காமல் நான் சுகப் படணும்னு நினைக்கப்படுமாடா?"

ராஜாமணி பதில் எதுவும் சொல்லவில்லை. கிழவருக்குப் போக வேறு இடம் இல்லைதான். அதுதான் எல்லாவற்றிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/98&oldid=1523498" இலிருந்து மீள்விக்கப்பட்டது