பக்கம்:ஆடும் தீபம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

111


இப்போ இடையிலே வந்த நீ அந்த முடிவை மாத்தி விடப் போறியா?

எனக்குக் கடவுள் தந்த ஒரேஒருநாதியே எங்க அத்தான் தானே?அதையும் நீ பிடுங்கிக்கப்போறியா? அப்படின்னா என்னோட ஆசையெல்லாம் மண்ணுதானா? என்னோட நெனப்பு எல்லாம் பகலிலே கண்ட கனவைப் போல, பழசாப்போன கதையைப்போல பாழாகப் போகவேண்டியதுதானா?

நீயே நல்லா யோசிச்சுப்பாரு அல்லி. யோசிச்சுப் பார்த்திட்டு ஒரு முடிவுக்கு வா!

என்னோட அத்தான்தான் எனக்கு எல்லாம். அவுங்களை நான் பிரிஞ்சுட்டா,நீ எங்களைப் பிரிச்சுட்டா அப்புறம்என் கதி..

ஒரு பொண்ணை நீயே வீணா கொன்றுபோடப் போறியா அல்லி?...!!

அதற்குமேல் அல்லியால் படிக்க முடியவில்லை. அல்லியின் தலை சுழன்றது. பிரளயத்தின் கொந்தளிப்பில் அகப்பட்டுக்கொண்ட துரும்பைப்போல அவள் தத்தளித்தாள்.

இதயத்தில் கூடவா எரிமலை இருக்கிறது.

“ஐயோ அத்தான்! அத்தான்! அவளது நெஞ்சின் கதறல் அவளைக் கொன்று விடும்போல் ஒலித்தது. ‘ஆ...கடவுளே...!”

பாவம் அல்லிக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/112&oldid=1317622" இலிருந்து மீள்விக்கப்பட்டது