தூவானம்
விடவில்லை!
‘சரக்’என்ற பேரிரைச்சலுடன், சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் வந்து நின்றது டாக்ஸி. மயங்கிக் கிடந்த ராஜநாயகத்தை அடியோடு மறந்து விட்ட அருணாசலம், தலை தெறிக்க ஓடினான். இரண்டு மூன்று வண்டிகள், அடுத்தடுத்து புறப்படத் தயாராயிருந்தன. இவற்றில் எந்த வண்டியில் அல்லியைத் தேடுவது? பதைபதைத்த அவனுடைய உள்ளம், விநாடி நேரம்தான் இந்தக் கேள்வியைச் சுற்றி வந்தது. எதிரே நின்று கொண்டிருந்த ரயிலை நோக்கி விரைந்தான். ஆற்றாமையும், ஆவலும் விழிகளில் அலை மோதிக் கொண்டு வந்தன. அல்லியைக் காணவில்லை. அவன் ரெயிலில் பிரயாணம் செய்த போது, ‘டிக்கட் இல்லாப் பிரயாணி’ என்ற கெட்ட பட்டத்தை அவ னுக்கு வரவொட்டாமல், காப்பாற்றிய அந்த அல்லியைக் காணவில்லை. அவனை மனிதனாக்கிய அல்லியைக் காணவேயில்லை. மூன்று ரெயில்களிலும், கவனமாகத் தேடினான். ஆட்டு மந்தை போல அலை மோதிக் கொண்டு வந்த மனிதக் கூட்டத்துக்குள் புகுந்து சென்று, ஆராய்ச்சி நடத்தி முடித்து, மிகவும் சோர்ந்து விட்டான் அருணாசலம்.
மயக்கம் தெளிந்த ராஜநாயகம் மேல்மூச்சு வாங்கியபடி காரிலிருந்தார். உடலும், உள்ளமும் வேர்த்து விட்டதால்