பக்கம்:ஆடும் தீபம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

143


ஆளுக்கு ஓர்
அத்தியாயம்

நாவல் திசைப்பக்கமே திரும்பியவனல்லநான். ஒரு விருந்து வைத்து ஆசிரியர் என்னை இதில் சிக்க வைத்துவிட்டார். ஆரம்பத்தில் பங்கு பெற இருப்பவர்கள் பட்டியலில் என் பெயர் வந்து கொண்டிருந்தபோது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். ஒரு சமயம் மறுத்து விடலாம் என்றுகூட நினைத்ததுண்டு. அது அழகல்ல’ என்றும் சொல்லிக்கொண்டேன்; புலியும் வந்து விட்டது.

ஒருவரே எழுதுகிற நாவலில் கதைச் சிக்கல்களை ஏற்படுத்தி விடுவித்துக் கொள்வது அந்த ஆசிரியரது பொறுப்பு; எளிதுங்கூட. ஆளுக்கொரு அத்தியாயமாக கதைப் போக்கை எப்படி எப்படி யெல்லாமோ திருப்பிவிட்டு எங்கோ கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள் முன்னோடிகள். நானும் என் பின்னோடியைப் பற்றி கவலைப்படாமல் அல்லியையும்,இன்னாசியையும் ஒரு நிலையில் நிறுத்திக்குழப்பி விடுகிறேன். அடுத்தவர் பி. வி. ஆர். அவர் பார்த்துக்கொள்கிறார்!

சி. சு. செல்லப்பா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/144&oldid=1337574" இலிருந்து மீள்விக்கப்பட்டது