பக்கம்:ஆடும் தீபம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பொறி பத்து:


சிநேகிதி
செந்தாமரை

மாங்குடியில் வயலில் இரு நாய்கள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டு பாய்ந்தது அல்லியின் மனத்தில் பதிந்த சம்பவம். அதனுடைய தொடராக-அத்துடன் இணைத்துவிட்ட, அல்லது தாமாகவே இணைந்து கொண்ட சம்பவம் அவள் கண் முன்னேயே நடந்து விட்டது. இத்தனை நாள் கண்டறியாத வெறியையும் உயிர்த் துடிப்பையும் கண்டபோது, அவளுக்கு வாழ்வில் எது நிஜம் எது பொய் என்பதைக் கூடநிர்ணயிக்க முடியவில்லை. பிணத்தை நடுவே வைத்துக் கொண்டு அவளும் இன்னாசியும் என்னென்னவோ பேசினார்கள் ஒருவரை ஒருவர் கூர்ந்து பார்த்தனர். அப்போது அவள் பேசின வார்த்தைகளின் அர்த்தத்தைக்கூட அல்லியால் இப்போது அறியமுடியவில்லை. என்னதான் உயிர் போனாலும்போகட்டும் என்று, வேறு கதியில்லையே? என்ற நிலையால் ஏற்பட்ட மனநிலையில் வெறுப்புடன் உணர்ச்சி மேலெழுந்து நின்றாலும், உயிரின் துடிப்பு ஒன்று அவளுள் தவித்துத் துடிக்கத்தான் துடித்தது. அவளுடைய உயிர் அவளுக்குக் கூட சொந்தமில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது போல, அவளுடைய உயிரே அவளுள் இருந்து அவளை விட்டுப் பிரிய மறுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/160&oldid=1389269" இலிருந்து மீள்விக்கப்பட்டது