பக்கம்:ஆடும் தீபம்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ஆடும்


‘மணிமேகலைத்துறவு என்னும் படத்தின் காட்சியொன்று நினைவைத் தட்டிக் கொடுத்தது. அம்முடிவைத்தொட்டுத் தேட ஓடிய போது குறுக்கிட்டு மறித்த திரும்பு முனை அவளைக்கண்டு சிரித்தது.

நான் போகப் போகிறேன்!” என்று வீறு கொண்டு முழங்கினாள் அல்லி.

“எங்கே?’ என்று வினவினாள் செந்தாமரை. அல்லி மெளனச் சிலையானாள். “நீ இங்கேயிருந்து போய்விட்டால், அப்புறம் நானும் என் மூத்த மகள் ராஜவல்லியைத் தேடிக்கொண்டுதான் போக வேண்டும்; இது ஆண்டவன் மீது ஆணை!’ என்று புலம்பினார் ராஜநாயகம். அவர் பச்சைப் பாலகனானார்.

அல்லிக்குச் சொந்தமான பணம் நகை நட்டுக்கள் துணி மணிகளுக்கு மத்தியில் அல்லி வாய் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

‘அப்பா! அப்பா’

தழலிடைப்பட்டுச் சோதனையில் வெற்றி பெற்றுச் சுடர் தெறித்த சொக்கப்பச்சைத் தங்கத்தின் இதயமெனும் எழில் தீபம் ஆடிக் கொண்டிருந்தது. பூஜை அறையின் தூண்டாமணி விளக்கு ஆடாமல் அசையாமல் நின்று நிதானமாகச் சுடர் விட்டுக் கொண்டேயிருந்தது.

தாமரையின் வதுவை மடல் வந்தது. நினைவுகள் மணம் கமழ்ந்தன. கனவுகள் அந்நினைவுகளுக்கு உயிர்ப்புத் தந்தன.

அல்லி சிரித்தாள்; அவளின்சிரிப்பை வான்மதி எடுத்துச். சொன்னது.அவள் இதயத்துக்கு உதாரணம் காட்டியது. ஆடாத அத்தீபம். மாங்குடிப் பெண் அல்லியின் நெஞ்சுத்