பக்கம்:ஆடும் தீபம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஆடும்


அல்லிக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. மாங்குடி வயலில் பார்த்த அந்த இருவரின் பார்வையில் சுழன்ற பேராசையும், அக்கிரமும் வாத்தியாரின் பார்வையில் இல்லை. நாகரிகமாக, சாமர்த்தியமாக கொடுமையை மறைத்து, குளிர்ந்த பார்வை பார்த்தார் ராஜநாயகம்.பட்டினத்தின் நாகரீகத்தின் முதற்படி இது. அரக்கத்தனத்தை மறைக்கும் ஆற்றலைப் பட்டணத்தார்கள் நன்றாகப் பயின்றிருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது. இந்தப் புலி திடீரென்று பாய்ந்து விடாது; குறி வைத்துத்தான் பாயும் என்பதும் அவளுக்குப் புரிந்து விட்டது. -

ராஜநாயகம் தொண்டையைக் கனைத்தவாறு, ‘ அல்லி! அந்த அருணாசலம் உனக்கு மாமனா? அவனுடைய அக்காள் மகளா நீ?’ என்று கேட்டார்.

அருணாசலத்தைப் பற்றி அவர் பேசியதும், அல்லியின் முகத்தில் நாணம் ஏற்பட்டது. சற்று முன் கண்டகனவை நினைத்துப் பார்த்தாள். வாத்தியாரின் பக்கம் திரும்பி, “வாத்தியாரிடம் நான் எதற்குப் பொய் சொல்லனும்? குருவிடம் பக்தியோடு இருந்தால் தான் ஏதாவது வித்தை கத்துக்கிட்டாலும் சரியாக வரும். அவர் எனக்கு உறவு இல்லீஙக ரயிலிலே சந்திச்சோம் அவ்வளவு தான்...!” என்றாள் அல்லி.

‘பூ இவ்வளவுதானா? பயல் சரியான பிடியாகத்தான்

பிடித்திருக்கிறான் அவனை நம்பி-ஹும்-ஏம்மா, இப்படித்தனியாக வரலாமா?...’

அல்லியின் நீண்ட விழிகள் வியப்பால் மலர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/57&oldid=1298463" இலிருந்து மீள்விக்கப்பட்டது