உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஆடும்




ஆடுகின்ற
அன்பு


எழுத்தாளருக்குப் பிறரைப் பற்றி எழுத வாய்ப்புக் கிடைக்கும்; ஆனால், தன்னைப் பற்றி எழுதிக் கொள்ளும் நிலை அபூர்வமாகவே கிடைக்கிறது. அந்த ஒரு நல்வாய்ப்பைப் பலருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது ‘உமா’, ‘ஆடும் தீபம்’ வாயிலாக என்னுடைய இதயமும் பேசத் தொடங்குகிறது. அல்லிக் கொடியாள் அன்புப் பெண். அவள் ஆடும் தீபமாக இயங்கி நின்று, மற்றவர்களின் நெஞ்சங்களை ஆட்டி வைக்கிறாள். ஏனென்றால், அவள் ஆடுகிறாள்; ஆட்டுவிக்கப் படுகிறாள் அல்லியின் உள்ளத்தைப் படம் பிடிக்க வேண்டிய கட்டங்களை உணர்ந்தும், உணர்த்தியும் துணை ஆசிரியர் கொடுத்த குறிப்புக்கள், சகோதரிகள் ஸரோஜா ராமமூர்த்தி, கிருஷ்ணா ஆகியவர்களுக்கு உதவியது போல, எனக்கும் பயன் தந்தன. கொடுத்த பொறுப்பை ஏற்றேன். ஆனால், அல்லியின் எதிர்கால வாழ்வைத் தொடர்ந்து இயக்கப் பயந்து ஒதுங்க நேர்ந்து விட்டது. சகோதரி அல்லியின் வாழ்வும், வளமும் சிறப்படைய வேண்டும். இதுவே என்னுடைய இதயபூர்வமான ஆவல்.

ஸி. ஆர். ராஜம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/87&oldid=1686000" இலிருந்து மீள்விக்கப்பட்டது