உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீபம்

91


அவள் ரெயிலில் தன்னிடம் சொன்னதைக் கூறினான் அருணாசலம். இதைக் கேட்டு விட்டு, மறுபடியும் அட்டகாசமாகச் சிரிப்பைக் கொட்டினான் சாத்தையா.

“அல்லி சொல்றதை நீ நம்புறியா?”

“ஏன், அல்லியைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று அருணாசலம் கேட்ட குரலில், ஆர்வம் குமிழியிட்டது.

“உன்னை விட எனக்குத் தெரியும் அருணாசலம்!”

“ஓஹோ…?”

“அருணாசலம் சொல்றேன், கேளு; அல்லிக்கு என் ஊர்தான். பெத்தவங்களை முழுங்கி ஏப்பம் விட்டது என்னமோ நெசம். அவுங்க ஒருத்தர் பின் ஒருத்தராகத் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே, தெரியுமா?” என்று கேட்டு விட்டு நிறுத்தினான் சாத்தையா.

“தற்கொலையா பண்ணிக் கொண்டார்கள்?”

“ஆமாம்: பின்னே மகளுடைய நடத்தைக்காக, ஆயிரங்காலம் ஆயிசோடு இருக்கவா வரம் கேட்பாங்க?”—அவனுடைய இந்தக் கூற்று, அருணாசலத்தின் நெற்றிப் பொட்டில் கோடரியால் தாக்கியது போல் இருந்தது.

சற்று நேரம் அவனைச் சிந்திக்க விட்டு, மேற்கொண்டு தொடர்ந்து பேசினான் சாத்தையா.

“பெத்தவங்க இல்லாது போனா, சொந்தக்காரங்க கூடவா ஊரிலே இல்லாது போயிடுவாங்க? நல்ல மாடானா, உள்ளூரிலே விலை போகாதா, அருணாசலம்? நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு. யாருக்கும் அடங்காமே அல்லி ஓடி வந்தான்னா, அங்கேதான் இருக்கப்பா ரகசியம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/92&oldid=1686005" இலிருந்து மீள்விக்கப்பட்டது