பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

105

ஒருத்தி இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி, தன்னை ஒட்டி வளர்ந்திருக்கும் பூங்கொம்பை வளைத்து பிடித்து ஒயிலாக நிற்கிறாள். மற்றொருத்தியோ ஒரு காலைத் தரையிலே ஊன்றி, மற்றொரு காலை மடித்து, மரத்தினையே மிதித்து, மிக்க வலுவுடன் இரண்டு கையாலும் சேர்த்துக் கொடியினை வளைத்து நிற்கிறாள்.

இருவரும் அரை வரையிலேயே ஆடை அணிந்திருக்கின்றனர். மேலாடை ஒன்றும் அணியாதவராய் கன்னங் கருத்த வடிவில், பொன்னம் பெருத்த தனங்களுடன், காணும் ஆடவர் உளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளும் வஞ்சிகளாக நிற்கின்றனர்.

கழுத்தில் அணிந்திருக்கும் கண்டசரங்கள்தான் எத்தனை எத்தனை வகை கூந்தலையெல்லாம் வாரி முடித்து, அவைகளைச் சுற்றி முத்துமாலைகளைக் கோத்துக்கட்டி. அந்தக் கொண்டையிலே மகரிகைகள் என்னும் அணியை அணிந்து சர்வாலங்கார கோதைகளாக நிற்கும் அவர்தம் அழகுதான் என்னே! காதிலே அணிந் திருக்கும் விராட குண்டலங்கள்தான் எத்துணை அழகு! இடுப்பிலே அணிந்திருக்கும் அந்தரீயம், காலிலே அணிந்திருக்கும் அப்பைநீளம் வரையல்லவா, மடிமடியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சலபாஞ்சிகை வடிவங்களைக் கண்டால்,

"மெலியும் இடை தடிக்கும் முலை
வேய் இளந்தோள் சேயரிக்கண் வென்றி மாதர்”

என்று கம்பன் போன்ற மகாகவிகள், சொல்லால் உருவாக்கிய கன்னியை அல்லவா இந்தச் சிற்பிகள் கல்லில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள் என்று தோன்றும் . இன்னும்,

பாவையர் கை தீண்ட
பணியாதார் யாவரே