பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

109

வரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. ஆனால் நாமெல்லாம் இந்த மரபை அனுஷ்டிக்கிறோமா என்பது கேள்வி.

கீர்த்தித் திரு அகவலில், அரியொடு பிரமற்கு அளவறிய வொண்ணாதவனாக, தூண்டு சோதி தோற்றிய தன்மையை நினைக்கிறார். உத்தரகோசமங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பைப் பாராட்டுகிறார். திரு அண்டப் பகுதியிலோ இன்னிசை வீணையில் இயைந்தோனாக, பிரமன்மால் காணப் பெரியோனாக, அதே சமயத்தில் பக்திவலையில் படுவானாக, சொற்பதம் கடந்த தொல்லோனாக எல்லாம் இறைவனைக் காண்கிறார், அவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருக்கிற தன்மையை.

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

என்றெல்லாம் விளக்கம் தருகிறார்.

கீர்த்தித் திருஅகவல் முதலிய மூன்று அகவல்களையும் பாடிய பின்னர் மணிவாசகர் தில்லையில் தங்கியிருந்த காலத்து அங்குள்ள பெண்கள் வளைக்கரங்கள் ஒலிக்க, கிண்கிணிமாலைகள் ஒலிக்க, முகத்தில் குறு வியர்வை பொடிப்ப, விழிபுரளச் சுண்ணம் இடிப்பதைக் கண்டார். அதையே பொற்சுண்ணம் இடிக்கும் பாடல்களாகப்

பாடினார்.

மூத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய் குழல் வண்டினம் ஆட ஆட
சித்தம் சிவனொடும் ஆட ஆட
செங்கயற்கண் பனி ஆட ஆட