பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

115

அவருடைய அன்பு ஒரு பாட்டாகவே வெளிவந்தது. பாட ஆரம்பித்தார் கவிஞர்:

மிக்க மது ரைச்சிவனும் வீரபத்திரன் கதனும்
சொக்கர் இருவரெனத் தோன்றினார்

என்று ஆரம்பித்தார். பாட்டைக் கேட்டவர்கள் எல்லாம் "என்ன! புகழுரைக்கும் ஓர் அளவு உண்டல்லவா! மதுரையில் கோயில் கொண்டிருக்கும், சொக்கலிங்கப் பெருமானையும் இந்த வைத்தியர் சொக்கலிங்கத்தையும் ஒரே தலையில் வைத்து பாடுகிறாரே! என்று அதிசயித்தார்கள்.

கவிஞர் பக்கத்தில் உள்ளவர்கள் முகத்தில் உள்ள குறிப்பை எல்லாம் கவனித்துக் கொண்டார், என்றாலும் உண்மை உண்மைதானே? அதைச் சொல்லித் தானே ஆகவேண்டும்? ஆதலால் மேலும் பாட ஆரம்பித்தார்.

மிக்கமது ரைச் சிவனும்
வீரபத்தி ரன் சுதனும்
சொக்கர் இருவரெனத்
தோன்றினார் - அக்கோன்
பிறவாமல் காப்பான்;
பிறந்தாரை மண் மேல்
இறவாமல் காப்பான் இவன்"

என்று பாடி முடித்தார். உண்மைதானே! மதுரைச் சொக்கலிங்கப் பெருமானால் அவன் விரும்பினால் எவ்வளவோ அல்லல்தரும் பிறவியே இல்லாமல் காப்பற்ற முடியும். இல்லை, அப்படி அவன் முயன்று அந்த முயற்சியில் தோற்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். மனிதன் பிறந்தே விடுகிறான். அந்த நிலையில் அப்படிப் பிறந்தவனை இறவாமல் காப்பது தானே அடுத்தபடியாகச் செய்யவேண்டியது! அந்தக் காரியத்தை