பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வத்திருமணம்

க்கள் பிறந்து வளர்ந்து பருவம் எய்தி, எண்ணற்கரிய அனுபவங்களைப் பெற்று, மூப்புற்று மறைகின்றனர் என்பதை எல்லோரும் அறிவார்கள். குழந்தைப் பருவத்தில், காண்பவர் எல்லோருக்கும் களிப்பை அருளினாலும் பூரணமான இன்பத்தைக் குழந்தையாக இருப்பவர்கள் பெறுகிறார்களா என்பது மனோதத்துவ நிபுணர்கள் கண்டறிய வேண்டியதொன்று.

வயோதிகர்கள் பருவத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். தாங்கள் துன்பப்படுவதுடன் மற்றவர்களுக்கும் துன்பம் ஊட்டும் பருவம் அது. ஆதலால் மக்கள் வாழ்வில் இன்பப் பேறு அடைகின்ற பருவம் இரண்டிற்கும் இடையிட்ட பருவம்தான். கட்டினம் காளையும், கவின் நிறைந்த கன்னியும், ஒருவரை ஒருவர் அடுத்து காதலித்து மணம் புரிந்து அனுபவிக்கும் இன்ப வாழ்வினுக்கு இணையே கிடையாது. இருவரும் அக்காலத்து சேர்ந்து நடத்தும் வாழ்க்கை ‘மடநாகு உடனாகச் செல்லும் மழவிடை போல் செம்மாந்திருக்கும்' என்று கவிஞர் வர்ணிப்பர். இப்படி இணைந்து நடத்தும் வாழ்வு தான் மலர்ந்த வாழ்வாகும். மணம் வீசும் நாளாகும். அதனால் தான் ஆணையும் பெண்ணையும் இணைக்கும், அந்தச் சடங்கிற்கே மனம், திருமணம் என்றெல்லாம் பெயர் வைத்து விட்டார்கள் பெரியவர்கள்.

உருவமில்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்தான் கலைஞன். 'ஒரு நாமம், ஒர் உருவம், ஒன்றுமில்லாத