பக்கம்:ஆண்டாள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

143


என்புரு கியினி வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்,
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்.
அன்புடை யாரைப் பிரிவுற நோயது
நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்48

சமத்காரம் அல்லது விரகுடன் பாடும் பாடலாய் ஐந்தாவது பாடல் அமைந்துள்ளது.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றுந் தா49

என்பது பிற்கால ஒளவையார் பாடிய பாட்டாகும். இதில் யானை முகத்தனா விநாயகப் பெருமானுக்குப் பால், தேன், வெல்லாப்பாகு, பருப்பு ஆகிய நான்கினையும் தருவதாகவும், அதற்கு மாற்றாகச் சங்கத் தமிழ் என வழங்கும் இயல், இசை, கூத்து ஆகிய மூன்று தமிழினையும் தமக்குத் தர வேண்டும் என்றும் வேண்டுகின்றார், நான்கு பொருள் தந்து விட்டு மூன்று பொருள்களை அதற்குப் பதிலாகப் பெற்றுக் கொள்வது வணிக நோக்கில் எளிதாகும். எனவே நான்கு தந்து விநாயகரிடமிருந்து மூன்று பெறும் சமத்கார - சதுரப் பாடான உத்தி இப்பாடலிற் காணப்படுகின்றது. இது போவே மணிவாசகர்.

"தந்தது உன்றன்னை கொண்டது என்றன்னை
சங்கரா ஆர்கொலோ சதுரர்50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/145&oldid=1462147" இலிருந்து மீள்விக்கப்பட்டது