52
ஆண்டாள்
- வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
- வல்ல மரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
-நாச்சியார் திருமொழி; 10:10:3-4
- செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த
- மெய்ம்மைப் பெருவார்த்தை
- ഒു., 11:10; 1-4
எனவரும் இடங்களை நோக்குக78 இதனால் பெரியாழ்வாரே இவற்றைப் பாடியிருப்பின் இவ்வாறு படைக்க வேண்டியதில்லை என்று துணியலாம்.
மேலும் பெரியாழ்வார் திருமொழியின் 'பாவனை' நிலைக்கும் ஆண்டாள் பாடல்களின் 'பாவனை' நிலைக்கும் இடையே ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மனவேறுபாடுகள் தெற்றெனத் தெளியப்படுகின்றன. பெரியாழ்வாரின் இறையன்பு பாடுபட்டுத் தேடியது. ஆண்டாளின் இறை காதலோ புதையலெடுத்த பெருநிதியம் என்னும் பொருள் பொதிந்ததாகும்.79 (பி.ஶீ ஆசார்யா கோதை அல்லது காதல் வெள்ளம், ப. 104).
ஆகவே, கருத்து வெளிப்பாடு, பாவித்துப் பேசுதல், உணர்வு வெளியீடு, இருவேறு நிலைகளில் இருந்து அவரவரின் இயல்புக்கேற்ப (ஆண் பெண்) பாக்கள் இயற்றல், உணர்த்தும் திறன் ஆகியவற்றைத் தெளிந்து பார்க்கும் போது, பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரமல்ல; ஆண்டாள் தனியொரு ஒப்பற்றவோர் உன்னத தனிநிலை ஆழ்வாரே என்று உறுதி செய்யலாம்.
முடிவுரை
இதுவரை கண்ட கருத்துகளின் அடிப்படையில் தெளியலாகும் செய்திகள் :