பக்கம்:ஆண் சிங்கம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கன்னன்

போல் மருளூட்டும் ஒரு கணம். நீண்டு தொங்கும் சடை கள் போல் தோற்றமளிக்கும்.

சாதாரணமாகவே இப்படி அரண்டு மிரண்டு வருகிற மாடசாமியின் கண்களோ இல்லாத பலவற்றை வரைந்து காட்டின. முண்டாசு கட்டிய முறுக்கு மீசையான் சவுக்கு வைத்துக் கொண்டு நிற்பது போல் தோன்றியது அவனுக்கு. இலைகளூடே ஒடுங்கிக் கிடந்த பறவைகள் படபடவென்று சிறகடித்துக்கொண்டது அவன் அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. அவன் “அப்பனே... சாலைக்கரையா! நீதான் துணை’ என்று கும்பிட்டான்.

வண்டி ஒடிக்கொண்டிருந்தது. திடீரென்று முத்தைய பிள்ளே விவரணையற்ற, தெளிவற்ற குரலிலே, இமைபோல, உளறினர். பதறியடித்து அலறுவது போல தொனித்தது குரல்.

பயம் மாடசாமியின் புடதியிலேறி உட்கார்ந்து அழுத்தியது. திடுக்கிட்டு எசமான் என்ன எசமான்? என்று கேட்டபடி உள்ளே தலையைத் திருப்பினான் வண்டிக்காரன்.

“ஒண்னுமில்லே. கண்ணை மூடியிருந்தேனா... தூக்கக் கிரக்கம். தூங்கியும் தூங்காததுமாக இருக்கையிலே என்னென்னவோ நினைப்பு, யாரோ என்னவோ கேட்ட மாதிரியிருந்தது. என்னவோ சொல்ல வாயெடுத்தேன். அதுதான்’ என்றார்.

‘சரி சரி.தடம் பார்த்து ஒட்டு. வண்டி வேகமாகவே போகட்டும். இந்தா, சாட்டைக் கம்பு வேனும்லுைம் வச்சுக்கோ என்று அவராகவே கொடுத்தாா,

மாடசாமி வெளியே பார்வையைத் திருப்பினான். அவன் தேகம் நடுக்கிக் கொடுத்தது. உடலெல்லாம் புல்லரித்தது நடு ரோட்டில் கறுப்பாக எவனோ ஒரு சாயவேட்டிக்காரன் சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிற்பது அவன் பார்வையில் பட்டது ‘யாரய்யா அது, நடு ரோட்டிலே?” என்று கேட்க வாயெடுத்தான். துணி வில்லை. மாடுகள் முன்னே நகராமல் மிரண்டன.

16