உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண் சிங்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

'நடக்குது ஐயா, நடக்குது. ஹிந்தியிலே அமர காதல்னு ஒரு படம் வந்துதே. அதை நீங்க பார்க்கலே போலிருக்கு மாஸ் மைண்டு இருக்குதே...’

‘சரி சரி. அப்படியே எழுதிப்போடுவோம்.’

‘இன்னைக்கு ராத்திரியே நீங்கள் எழுதிக் கொடுத்திரனும். நாளன்னைக்கு ஷூட்டிங் வச்சிருக்கோம்!”

அதெல்லாம் எழுதிவிடலாமுங்கேன்!”

‘அது சரி. வேறே சில கரெக்ஷன்ஸ் செய்யணும்’

‘சொல்லுங்க’. ‘கள்வர் தலைவன் வந்து மாப்பிள்ளையைக் கொல்றதை விட, காதலனே கத்திச் சண்டை செய்து கொன்றால் நல்லாயிராது?’

‘அப்போ விஷப் பூ?’

‘ஒ, அது வேறே இருக்கு பார்த்திகளா! ஆனாக் கடைசியிலே காளிதேவி வந்து செத்தவங்களையெல் லாம் பிழைக்க வச்சிடுறாள்னு எழுதணும்’.

‘இதென்ன கஷ்டம்! எழுதிவிடலாம் ஸார். திருட்டுப் பசங்க, மணமகன், அவன் இவன் எல்லோரையுமே பிழைக்க வச்சிடுவோம்.

‘சேச்சே! நீங்க என்ன! மாஸ் மைண்டு தெரியாமப் பேசுறீர்களே! காதலன், காதலி, வடிவழகி மூணுபேரு மட்டுமே பிழைக்கனும். இவங்களைத்தான் காளி உயிர்ப்பிக்கணும் .

“சரிதான்.

‘கடைசியிலே, ஒரு லவ் ஸீன் பிரமாதமா இருக்கனும் டயலாக் என்ன?’

‘ஒ யெஸ் ஸார்.

சுரை எழு படலம்

பல மாதங்கள் பறந்தோடின.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/28&oldid=1071134" இலிருந்து மீள்விக்கப்பட்டது