பக்கம்:ஆண் சிங்கம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

சில ஸீன்கள் ஷூட்ட்டிங் நடந்து டப்பாவில் பிலிம் சுருள்கள் தூங்கின. –

சோணாசலம் சொன்னர் : ‘கதையை எவ்வளவோ மாற்றிவிட்டோம். திருடனுக வரும் காட்சிகளையே நீக்கிவிட்டோம். மணமகனுக்கு பிறவியிலேயே ஒரு வித வலிப்பு இருந்தது. அதனுல் அவன் செத்துப் போனான். புஷ்பம் எடுத்து வந்த காதலனை வடிவழகி காதலிக்கிறாள். அவனை விடமாட்டேன் என்கிறாள். முதல் காதலி புள்ளிமயிலிக்குக் கல்யாணமாகிவிட்டது என்று சொல்கிறாள். ஒருநாள் காதலன் வேட்டைக்குக் கிளம்புகிறான். அங்கே கானக்குயிலியைக் கண்டு கருத்தழிகிறான். காமுற்று அவளே அணையத் தாவும் போது சிலையாகிவிடுகிறான் புள்ளிமயிலி காதலனைத் தேடி வருகிறாள். சிலை தென்படுகிறது. இனம் கண்டு துயருற்று மூர்ச்சையாகிறாள். காளிதேவி கருணை கூர்ந்து சிலையை மனிதனுக்குகிறாள். அவன் மயிலியை அள்ளியெடுத்து ‘அடி புள்ளியே, என் உள்ளம் கவர் கள்ளியே! வள்ளி மடமானனைய புள்ளிமயிலியே’ என்று ஒரு பாட்டுப் பாடுகிறான். இந்தப் பாட்டு ரொம்பப் பிரமாதம், போங்கள்! நம்ம ஹீரோத் தம்பி ரொம்ப ஜோராகப் பாடியிருக்குது...இதுக்குள்ளாற, வடிவழகி வந்து, கோபம் கொண்டு அம்பெய்து மயிலியை தொலைத்து விடுகிறா. பிறகு ஒரிஜினல் கதை மாதிரித்தான்...படம் வந்ததும் பாருங்களேன் பிரமாதமாக இருக்கும்.

பரங்கி வளர் படலம்

‘சாகாத காதல்’ விதை ஊன்றி ஒரு வருஷம் முடிந்துவிட்டது. ஏறக்குறைய பாதிப் படம் தயாராகி விட்டது என்று சொல்லிக் கொண்டார்கள். ஒன்றிரு விளம்பரங்கள் பத்திரிகைகளில் தலைகாட்டின.

சோணாசலம் ‘கோவல'னிடம் கூறிஞர்: எவ்வளவோ மாறுதல்கள் செய்திருக்கிறோம். நீங்க எழுதிக் கொடுத்ததிலே எவ்வளவோ திருத்தங்கள் செய்திருக்கிருேம். சில ஸீன்களே விட்டிருக்கிருேம்.

27