பக்கம்:ஆண் சிங்கம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

செலவழித்திருக்கிறான் ஒருசமயம் ஒர் இரவைக் கழிக்க உதவிய தாசி ஒருத்தி வீட்டில் கைப் பெட்டியிலிருந்து நகைகளைத் திருடியவன் தான் அவன்.

அப்போதெல்லாம் தங்கம் அவனுக்கு மதிப்பு மிக்கது. மிக உயர்ந்தது. இன்பங்களை விலைக்கு வாங்க உதவுகிற மாயச் சரக்கு. நாகரிக ஆடம்பரங்களுக்குத் துனை நிற்கும் ஜம்பச் சாமான். அவன், பூலோகவாசிகள் பெரும்பாலோரைப் போலவே, தங்கத்தை கடவுளாகக் கும்பிட்டான். உலகில் தன்னை உய்வித்து வாழ வைக்கக்கூடிய மருந்து அதுதான் என்று நம்பினன். அதை எந்தவிதத்திலேனும் பெறுவதே அவனது வாழ்க்கை லட்சியம். அதற்காகவே வாழ்ந்தான் அவன். அதனால் அடிக்கடி சிறை செல்லவும் நேர்ந்தது. விடுபட்டு வந்ததும், அவன் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. அதற்காக மறுபடியும் திருடுவான். அவன் வாழ்வில் அவனைப் பிசாசாகப் படுத்தியது பொன்.

தங்க ரேகைகள், சிவந்த மேனியில் பளிச்செனப் புலனாகும்படி ஒடுகிற நீல நரம்புகள் போல், தனியொளி யுடன் நெளிந்து மிளிரும் பாறைகளைக் கொத்தி பொன் வெட்டும் கைதி பெருமூச்செறிவான் அடிக்கடி. அவன் அனுபவங்கள் எண்ணச் சாயைகளாக பூத உருவில் எழுந்து அவனை வதைத்தன. அவன் பார்வை சுழலும்.

தங்கம் மண்ணாங்கட்டிகள் போல் மதிப்பற்றுக் கிடந்தது அங்கே. புழுதியாய் படிந்து ஒவ்வொருவர் காலிலும் மிதிபட்டது. துாசியாகப் பற்ந்து எங்கும் ஒட்டிக்கொண்டிருந்தது. அதற்கு உயர்வு இல்லை. மதிப்பில்லை. தனிச் சிறப்பில்லை. உழைப்பவர்கள் அதைப் பாதுகாத்துப் பதுக்க முயலவில்லை. அதன் காந்த சக்தியால் கவருண்டு வாய் பிளக்கவில்லை. அவர்களுக்கு அதுவும் சாதாரணமான இயற்கைப் பொருளாகவே தோன்றியது. அவர்களது இரும்புக் கருவிகள் பாறைகளில் மோதி எழுப்பிய சிற்றொலிகள் தான் ‘டொக்கு டொக்'கென்று சிதறி எதிரொலிக்கும். அவர்கள் பேசுவதில்லை. கருமமே கண்ணாகிவிடும் மந்திரங்கள் போல் உழைத்தார்கள். அவர்களுக்கு

34