பக்கம்:ஆண் சிங்கம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆண் சிங்கம்

தார்... அவள் பேராசை’ ஒன்றைத் தணிக்கும் முயற் சியில் முழு மனசையும் ஈடுபடுத்தியதால், எத்தனை எத்தனை சில்லரை ஆசைகளைக் கொல்ல வேண்டியிருந், தது. நாவுக்கு ஆசை காட்டும் தின்பண்டங்கள்ேத் தியாகம் செய்தாள் அவள். கண்ணை வசீகரிக்கும் பலூன், சிறு பொம்மை முதலியவைகளே வேண்டா மென்று ஒதுக்கினுள்... குடை ராட்டினம் சுற்றுவதுஅது எப்பேர்ப்பட்ட விஷயம்! அதில் ஏறலாம் என்று. மனம் என்னமாய்க் குதித்தது. ரெண்டளு போய் விடுமே என்ற பயமல்லவா அவளேப் பின்னுக்கு

இழுத்தது.

காசுப் பிரச்னை ஒரு மாதிரியாகத் தீர்ந்ததும், காலப் பிரச்னை குறுக்கே நின்றது: எப்ப போவது? அம்மாவுக்குத் தெரியாமல் போகவேண்டுமே. 'அம்மா, சும்மா நான் காரிலே போய்விட்டு வாறேன்னு சொன்னுல், எடு வாரியலை! என்று பாயமாட்டர்கள் அவள்? எத்தனை தடவைகள் வள்ளி அழுதாள், கெஞ்சினுள் பலனேற்பட்டதா? ஊர்வழி போறதுக்கு இன்னும் வயசு வரலே எல்லாத்துக்கும் வேளேயும் பொழுதும் வரட்டும் என்று ஆர்வத் தியிலே அம்மா பச்சத் தண்ணியை வாளி வாளியாக அள்ளிக் கொட்டி ஞளே!... அம்மாளின் அனுமதியோடு பஸ்ஸில் பிரயா ணம் செய்ய முடியாது என்பது நிச்சயமான உடன் தான், அவள் வேறு வழிகளைப்பற்றி யோசிக்கலானுள்.

அவள் அம்மா மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு - ஒரு மணி முதல் நாலு நாலரைவரை - படுத்துத் துரங்குவாள். அடிச்சுப் போட்டதுபோல் கிடப்பாள். அந்த நேரத்தில்தான் வள்ளி தெருக்கோடி விடு, அடுத்த தெரு, கோயில் மண்டபம் என்று அலைந்து திரிவது வழக்கம். அஞ்சு மணி வரை வீட்டுக்குள் வராமல் போய்விட்டால்தான் அவளுக்கு மண்டகப் படி கிடைக்கும்!” -

- உலகத்தை ஆராய வேணும் என்ற எண்ணம் மனித உள்ளத்தில் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படு கிறது என்று புரியவில்லை. அந்தத் துடிப்பு பெற்று விட்டவர்கள் எந்தவிதக் கஷ்டங்களையும் சகித்துக்

器? 德

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/59&oldid=543135" இருந்து மீள்விக்கப்பட்டது