பக்கம்:ஆதி அத்தி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 103 அத்தி : ஆதி, நீயேன் இப்படி வாடியிருக்கிருய்? ஆதிமந்தி நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா? எப்படியோ உங்களை மீண்டும் உயிரோடு பார்க்க முடியு மென்ற ஒரே நம்பிக்கையில்தான் என் உயிர் இதுவரை நின்றிருந்தது. அத்தி : நீ தனியாகவா வந்தாய்? ஆதிமந்தி : என் மனம் ஒரு நிலையில் இருக்க வில்லை-நான் காவிரி ஒரமாகவே அன்று நீங்கள் வெள் ளத்தில் மறைந்ததிலிருந்து நடந்து வந்தேன்-என்னை யாரும் தடுக்காமல் விட்டுவிட்டார்கள். காவிரித்தாய் உங்களை எனக்குக் கொடுப்பாளென்று நம்பியே நான் வந்தேன்-அப்படியே அவள்தான் என்னை உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்தாள். அத்தி ஆதி, உனது காதலின் பெருமையை இப்பொழுதுதான் உணர்கிறேன். (மருதி அந்த இடத்தைவிட்டு மறைந்துபோகிருள்.) ஆதிமந்தி இந்த வீடு யாருடையது? இங்கே நீங்கள் எப்படி வந்தீர்கள்? காவிரித்தாய்க்கு உண்மை யாகவே இப்படி ஒரு வீடுண்டா? அத்தி : காவிரித்தாயா? காவிரியை நீங்கள் தெய்வ மாகக் கொண்டாடுகிறீர்கள். ஆனல் அவளுக்கு விடேது? ஆதிமந்தி அதுதான் நானும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஆளுல் அவள்தான் என்னை இங்கே கூட்டிவந்தாள். அந்தத் தெய்வமே தான் என்னே உங்களிடம் அழைத்து வந்தது! அத்தி (சந்தேகத்தோடு): யாரது உன்னே அழைத்து வந்தது? மருதியா? எங்கே மருதியைக் காணுேம்! மருதீ! (சுற்றுமுற்றும் பார்க்கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/101&oldid=742393" இலிருந்து மீள்விக்கப்பட்டது