104 ஆதி அத்தி ஆதிமந்தி : யார்? அவளா மருதீ? அவள் ஒரு தெய்வப் பெண்போல இருந்தாளே? அத்தி (பதட்டத்தோடு): மருதீ...எங்கே போனுள்? பொன் னி-பொன்னி! (பொன்னி விரைந்து வருகிருள்.) பொன்னி, மருதி எங்கே? பொன்னி : கடற்கரைக்குப் போவதாக என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்... அத்தி (கவலையோடு): கடற்கரைக்கா...? ஆதி, நீ என் கூட வா...அவளேக் கண்டுபிடித்து வருவோம். [தள்ளாடி நடக்கிருன்...... ஆதிமந்தி பின் தொடர் கிருள்.] திரை காட்சி எட்டு (கடற்கரை, ஒரு படகு கண்ணுக்குத் தென்படு கிறது. மருதி அமைதியாக அங்கே வந்து நிற்கிருள். சுற்றுமுற்றும் பார்க்கிருள்.) மருதி : எனது நாட்டியத்தைக் கண்டு ஆட்டனத் தியே மகிழ்ந்து பரவசமடைந்துவிட்டார். அது ஒன்று தானே எனது வாழ்க்கையிலே நான் கொண்டிருந்த ஆசை...? அந்த ஆட்டனத்திக்கே பணிவிடை செய்து இன்பமடையும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது... கடைசியிலே எங்கள் இளவரசி ஆதிமந்திக்கு அவருடைய காதல் தெய்வத்தையே வழங்கிவிட்டேன். இனிமேல் எனக்கென்ன குறை? இனிமேல் இந்த வாழ்வுதான் எனக்கு எதற்கு? எனது லட்சியம் பூர்த்தியாகிவிட் என்னைப் போலப் பாக்கியம் செய்தவர்கள் * . . - ه - التي سا யாரிருக்க முடியும்? (படகில் ஏறிக் கடலிலே செலுத்துகிருள்.) திரை
பக்கம்:ஆதி அத்தி.pdf/102
Appearance