பக்கம்:ஆதி அத்தி.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதி அத்தி 35 மாரன் ; போக வேண்டி யதுதான்-கட்டாயமாகப் போக வேண்டியதுதான். வருசத்திலே ஒரு நாளைக் காவது உன் உடம்பைக் களுவ வேண்டாமா? சாத்தன் : (ஏண்டா உன்னுட வ51 க்கத்தைச் சொல் லரயா? நான் தைப் பொங்கலுக்கும் குளிக்கிறது.ண்டுடா. சும்மா என்னமோ நினைச்சுக்காதிே மாரன் : சரி சரி வருசத்திலே ரெண்டு நாளா? அதுக்கு மேலே குளிச்சா உடம்பு என்னத்துக்காகும்? அதென்ன கக்கத்திலே மூட்டை? சாத்தன் : புதுவேட்டி துணியெல்லாம் வச்சிருக் கிறேன். உன்னுடைய மூட்டை என்ன? மாரன் : முறுக்கு சுண்டல்...எல்லாம் நெய்யிலே பண்ணினது. சாத்தன் : ஒகோ அங்கே விளாவிலே ஏராளமா வருவாங்களே, எல்லோருக்கும் அங்கே விக்கிரதுக்கா? கெட்டிக்கார ஆளுடா நீ-எதிலையும் காசு சம்பாதிக் கிறதிலேயே உனக்கு நோட்டம்-ஆமா, காவிரியிலே ஒரு முளுக்காவது போடுவையா, அட அதுகூட இல்லையா? மாரன் : புது வெள்ளத்திலே நான் குளிக்கிற வளக்கமில்லை. சாத்தன் : அதென்னடா அப்பா? ஊருக்கெல்லாம் ஒரு விளா வர்ரபோது உனக்கென்னடா இப்படி எதிர் வாதம்? மாரன் : அதொன்னுமில்லே-இந்தப் புதுவெள் ளம் ஒரே வண்டலா இருக்குதோ இல்லையோ?-உடம் பிலே பட்டா உடம்பே நிறங்கெட்டுப் போகுது. சாத்தன் ஐயே-ஆமாம் ரொம்ப மெய்தான். உடம்பு தங்கமாட்டம் இப்போது மினுக்குது-காவிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/36&oldid=742423" இருந்து மீள்விக்கப்பட்டது