பக்கம்:ஆதி அத்தி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 47 மாரன் : உனக்குத் தெரியுமாடா? பெரிய வாய் பேசறயே? சாத்தன் ; டேய் போடா? நம்ம சமாச்சாரத்தை ஏண்டா இளுக்கிறே? (இரண்டு பேரும் போகிருர்கள்.) திரை காட்சி ஐந்து (காவிரி வெள்ளம் கண்ணுக்குக் காட்சியளிக்கிறது. அத்தி வெள்ளத்தில் புகுந்து ஆடப்போகிருன். ஆதிமந்தி பக்கத்திலே கரையில் நின்றுகொண் டிருக்கிருள். மக்கள் பலர் கூடி நிற்கிரு.ர்கள்.) ஆதிமந்தி : காலேயிலிருந்ததை விட இப்பொழுது வெள்ளம் அதிகக் கொந்தளிப்பாக இருக்கிறதே? அத்தி : இப்படிக் கொந்தளிக்கிற வெள்ளத்திலே நீந்தி விளையாடுவதில்தான் எனக்கு அதிக ஆசை. ஆதிமந்தி : வெள்ளப் பெருக்கென்ருல் எனக்கென் னவோ எப்பொழுதும் பயந்தான். அத்தி : ஆதி, காட்டாற்று வெள்ளத்தைப்பற்றி என்னிடம் எத்தனையோ முறை நீ இழிவாகப் பேசி யிருக்கிருய். அதை நான் மறந்து விடவில்லை. ஆனல் இது உங்களுடைய காவிரிதானே? ஆதிமந்தி : ஆமாம், எங்களுடைய காவிரித்தாய் தான். இருந்தாலும், தாயிடத்தில்கூட மரியாதையாக நடக்கத் தெரியவேணும். அத்தி : நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம், ஆதி. நான் எத்தனையோ பெரிய பெரிய பயங்கரமான வெள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/49&oldid=742437" இருந்து மீள்விக்கப்பட்டது