பக்கம்:ஆதி அத்தி.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதி அத்தி 55 மூன்ரும் அங்கம் காட்சி ஒன்று (கழாரிலே சோழ அரசரின் சிறிய அரண்மனை. அந்தப்புரத்திலே கரிகாற் பெருவளத்தானும் வேண்மாளும் கவலையோடு பேசிக்கொண்டிருக் கிரு.ர்கள். மாலை சுமார் 5 மணி இருக்கும்.) கரிகாலன் (வருத்தத்தோடு): இப்படி நேருமென்று யார் கண்டார்கள்? ஆட்டனத்தியோ நீஞ்சுவதிலும் வெள்ளத்தை எதிர்த்துச் செல்லுவதிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர். அவரைக்கூட இன்று திடீரென்று வந்த வெள்ளம் எப்படியோ வஞ்சித்துவிட்டது. வேண்மாள் (தேம்பிய குரலில்): என் மகள் பயித் தியம் பிடித்தவள் போல் அவர் பெயரையே கூவிக் கொண்டு காவிரியின் கரையோரமாக அலைந்துகொண் டிருக்கிருளே-வஞ்சிநாட்டு இளவரசரைப் பறிகொடுத்த தோடு, என் மகளையும் இப்படி அலங்கோலமாக புத்தி சுவாதீனமில்லாத நிலையில் தவிக்கவிட வேண்டிய தாயிற்றே! (விம்மி யழுகிருள்.) கரிகாலன்: என்ன செய்யலாம்? காவிரிக் கரை யோரமாக ஆதிமந்தியைத் தன் விருப்பம் போல் போக விடாமல் தடுத்து அரண்மனைக்கு அழைத்து வந்தால் அவளுடைய நிலைமை இன்னும் மோசமாகி விடுமென்று மருத்துவர்கள் கருதுகிருர்கள். அவளுடைய உள்ளம் பேதலிக்கிற நிலையிலே அவள் இன்னும் ஆட்டனத்தி உயிரோடிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிருள். வேண்மாள் (விம்மிக்கொண்டு) அவரை இனிமேல் உயிரோடு காணமுடியாதா? எனது செல்வ மகள் இனி மேல் கணவனை இழந்தவள்தான?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/57&oldid=742446" இருந்து மீள்விக்கப்பட்டது