பக்கம்:ஆதி அத்தி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆதி அத்தி அமைச்சர் : அவருடைய போக்கிலே விட்டால் தான் உள்ளத்திலே மெதுவாக அமைதி உண்டாகலாம் என்று மருத்துவர்கள் எண்ணுகிரு.ர்கள். இங்கே அவர் களை அழைத்து வந்தால் அவர்களுக்கிருக்கும் ஒரு நம்பிக் கையும் குலைந்துபோய் அவர்கள் மனம் நிரந்தரமாக இரு ளடைந்து போய்விடும். வேண்மாள் : இன்னும் கணவனைக் காணலாம் என்று அவள் நம்புகிருளா? அமைச்சர் : ஆமாம், காவிரித்தாய் ஆட்டனத் தியை விருந்துக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் அவரை விரைவிலே திருப்பி அனுப்பி விடுவாளென்றும் நினைத்துக் கொண்டிருக்கிரு.ர். கரிகாலன் : அமைச்சரே, ஆதிமந்தியின் செளகரி யத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் ஒழுங்காக இருக்கிறதா? அமைச்சர் : எல்லா வசதிகளும் செய்து வைத்திருக் கிருேம். அவர் விரும்புகிற மலர்களையெல்லாம் பெண்கள் பலர் கொண்டுவந்து தருகிரு.ர்கள். கணவனை எதிர் கொண்டழைப்பதற்காகத் தம்மைப் பூக்களாலும் தழை களிலுைம் இளவரசி அலங்காரம் செய்து கொள்ளு கிருர்கள். வேண்மாள் : நான் அவளோடு கூடவே செல்லட் டுமா? கண்ணிலாவது அவளைப் பார்த்துக் கொண்டிருந் தால் என் மனம் ஒரளவு நிம்மதியாக இருக்கும். அமைச்சர் : ஆதிமந்தி இன்றிருக்கும் நிலையிலே யாரும் அவருக்குப் பக்கத்தில் அணுகாதிருப்பதுதான் நல்லது. உங்களைக் கண்டால் அவர் உள்ளம் திடீரென்று கொந்தளித்துவிடும். தோழிப் பெண்களைக்கூடக் கூடு மானவரை அருகில் சொல்லாமலிருக்கும்படி மருத்துவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/60&oldid=742450" இருந்து மீள்விக்கப்பட்டது