பக்கம்:ஆதி அத்தி.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 59 கள் கூறுகிருர்கள், யாரைப் பார்த்தாலும் ஆட்டனத்தி எங்கே என்று கேட்பார்கள். கரிகாலன் : மருத்துவர்கள் கூறுவது சரியென்று தான் எனக்கும் தோன்றுகிறது. ஆதிமந்தி தானகவே தனது உள்ளத்திலே இருக்கும் துக்கத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி ஆறுதல் பெற வேண்டும். நாம் பக்கத்திலிருந்தால் அவளுக்கு நன்மை யொன்றும் ஏற்படாது. நமது துக்கமும் சேர்ந்து அவளே வாட்டத் தொடங்கிவிடும். அமைச்சர் : அம்மணி, உங்களைக் கண்டால் உடனே ஆட்டனத்தி எங்கே என்று கேட்பார்கள். உங்களால் அவர்களுடைய சோகப் பார்வையைத் தாங்கவே (Aւգ Աfrgil கரிகாலன் : அமைச்சரே, நீங்களே நேரிலிருந்து அவளுக்கு வேண்டிய செளகரியங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். நூறு தோழிப் பெண்களை இரவும் பகலும் மாறிமாறி வேலை செய்யும்படி ஏற்பாடு செய்யுங் கள். வழி நெடுக மனதுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளே இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். அமைச்சர் : அரசே, தாங்கள் கூறியவாறே எல்லாம் ஏற்பாடு செய்கிறேன். தாங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆதிமந்தியை எனது கண்ணிமை போலக் காத்து வருவது என்னுடைய பொறுப்பு. வேண் மாள் : அவள் கடற்கரை வரையிலும் இப் படிப் போவாளோ? அமைச்சர் . ஆமாம் தாயே, அப்படித்தான் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/61&oldid=742451" இருந்து மீள்விக்கப்பட்டது