பக்கம்:ஆதி அத்தி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6& ஆதி அத்தி பொன்னி: நானும் இல்லாவிட்டால் இன்னும் ஆனந்தமாக இருக்கும். எப்பொழுது பார்த்தாலும் உன் விருப்பம்போல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டுமே இருக்கலாம். மருதி: நீ இல்லாவிட்டால் எனது ஆடலேப் பார்த்து அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லுவதற்கு வேறு யாரிருக்கிரு.ர்கள்? பொன்னி: அதற்காக இப்படி என்னைச் சிறையில் போட்டு வைக்கக்கூடாது? தினமும் கொஞ்ச நேரமாவது விடுதலை கொடுக்கக் கூடாதா? மருதி: நீ காவிரிப்பூம் பட்டினத்திற்குள்ளே போனல் அப்புறம் எப்பொழுது திரும்புவாய் என்று சொல்ல முடியுமா? வம்பளப்பதற்கு உனக்குத்தான் அங்கே ஆயிரம்பேர் காத்துக்கொண்டிருப்பார்களே? பொன்னி. அதற்குத்தான் காவிரிக்காவது போய் நண்டுக்குட்டி நாலுபிடித்து வரலாமென்று கூப்பிடு கிறேன். அந்த நண்டுகளோடாவது கொஞ்ச நேரம் பொழுது போக்கலாமல்லவா? மருதி: பொன்னி, என் தந்தை வந்தவுடனே வஞ்சி நாட்டுக்குப் புறப்பட ஆயத்தமாக இருக்க வேண்டாமா? வஞ்சிநாட்டு இளவரசர் ஆட்டனத்தி நாட்டியத்திலே இணையில்லாதவர்-அவர் முன்னிலையிலே நான் ஆடி அவருடைய பாராட்டைப் பெற வேண்டும். அதுதான் என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு ஒரே ஆசை. பொன்னி: சரி மருதி, உன் விருப்பம் போலவே செய்.இரவும்பகலுமாக ஆடிப் பயிற்சிசெய்து எப்படியோ ஆட்டனத்தியிடம் பரிசி பெற்று வந்தால்போதும். அதற் காக இந்த அஞ்ஞாத வாசத்தையும் நான் பொறுத்துக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/69&oldid=742459" இலிருந்து மீள்விக்கப்பட்டது