பக்கம்:ஆதி அத்தி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 79 நான்காம் அங்கம் காட்சி ஒன்று [மருதியின் வீட்டிற்கு வெளியே நின்று மருதியும் பொன்னியும் பேசிக்கொண்டிருக்கிருர்கள். மாலை நேரம்.) பொன்னி : மருதீ, உனது ஆடலையும் பாடலையும் பார்த்து மகிழ்வதற்கு அவர் கிடைத்துவிட்டாரேஎன்னை ஏன் இன்னும் சிறையில் வைத்திருக்கிருய்? மருதி (சிரித்துக்கொண்டே) : அவர் இருந்தால் வேண்டாமா? பொன்னி : நான் எதற்கு? இந்த நான்கு நாட் களாக நீ என்னே ஒரு தடவைகூட உனது ஆட்டத்தைப் பார்க்கும்படி கூப்பிடவில்லையே? தருதி : அதனல் உனக்குக் கோபமா? பொன்னி : இல்லை மருதி, இன்றைக்காவது உனது கட்டுக் காவலை விட்டுக் காவிரிப்பூம் பட்டினத் துக்குப் போய் வரலாமா என்றுதான் கேட்கிறேன். நீயும் அவரோடு தனியாக...... மருதி (நாணத்தோடு) ; போடி குறும்புக்காரி. நீ எங்கேயும் போகக் கூடாது. பொன்னி : இப்போ மாலே வேளையாய் விட்டது. நான் போய்விட்டு இருட்டாவதற்குள் வந்துவிடு கிறேனே? மருதி : பொன்னி-நீ போகவே கூடாது. ஒரு வேளை என் தந்தை சீக்கிரமாகவே திரும்பிவந்து நீயும் இல்லாதபோது என்னை அவரோடு பார்த்தால் என்ன நினைப்பார்? பொன்னி : என்ன நினைப்பார்? ஒன்றும் இல்லா ததை நினைக்கமாட்டார்......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/79&oldid=742470" இலிருந்து மீள்விக்கப்பட்டது