பக்கம்:ஆதி அத்தி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி $97 காட்சி ஆறு (அதே காலை நேரம். காவிரி கடலிற் கலக்கும் இடம். ஆதிமந்தி,தனியாக அங்கே வந்து நிற்கிருள். அவளுடைய நீண்ட பிரயாணத்தின் இறுதிநிலை வந்துவிட்டது. கடலையும் காவிரியையும் பார்த்துப் பாடுகிருள்.) ஆதிமந்தி: (பாட்டு) பல்லவி கடலலையே என் கணவரெங்கே? காவிரியே என் கனவரெங்கே? (கடலலையே) அனுபல்லவி நடனமிடும் எழில்கண்டே நாயகரைக் கவர்ந்தீரோ ருைந்துருகும் ஏழையின்மேல் நல்லிரக்கம் கொள்வீரோ (கடலலையே) சரணம் பரிசாகக் கேட்டென்னைப் பாசமுடன் கைபிடித்தரர் பாடலிலும் ஆடலிலும் பாங்குடனே தான் வளர்த்தார் ஒருநாளும் பிரியாதார் உண்மையுள்ள ஆட்டனத்தீ ஓடிவந்தா லாகாதோ உள்ளம் வெங்தேன் ஆட்டனத்தீ (கடலலையே) (சரணத்தைப் பாடும்போது மருதி அங்கு வந்து விடுகிருள். அவள் கூர்ந்து பாடலைக் கேட்டு அப்படியே அசைவற்று நின்றிருக்கிருள்.) மருதி (பாட்டு முடிந்தவுடன் ஆதிமந்தியின் எதி ரிலே வந்து நின்று): அம்மணி, உள்ளத்தை உருக்கும் படியாகப் பாடுகின்ற தாங்கள் யார்? y

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/96&oldid=742489" இலிருந்து மீள்விக்கப்பட்டது